மணிரத்னம் கூட்டணியில் ரஜினி, கமல்.. எம்புட்டு பெரிய ஸ்கெட்ச்

மணிரத்னம் தற்போது தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை எடுத்த முடித்துள்ளார். இப்படத்தில் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் மணிரத்னம் தனது ஒவ்வொரு படத்திற்கும் மிகப்பெரிய இடைவெளியை எடுத்துக் கொள்வார். ஏன் இவ்வளவு இடைவெளி எடுத்துக் கொண்டார் என்பது அவருடைய அடுத்த படமே பதில் சொல்லும்.

அவ்வாறு ஒவ்வொரு படத்திலும் அவ்வளவு வர்ணனை செய்து வைத்திருப்பார். மேலும் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றதில் மணிரத்தினத்தின் பங்கு மிகப்பெரியது. அதை யாராலும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.

தற்போது தமிழ் சினிமாவில் நடிப்பு ஜாம்பவான்களாக இருக்கும் ரஜினி மற்றும் கமல்ஹாசனின் மறக்க முடியாத படத்தை மணிரத்னம் இயக்கி இருந்தார். அதாவது ரஜினி, மம்முட்டி நடிப்பில் வெளியான தளபதி படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். தற்போது உள்ள காலத்திலும் நட்புக்கு உதாரணமாக இந்த படம் சொல்லப்படுகிறது.

அதேபோல் உலக நாயகன் கமலஹாசனின் திரை வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நாயகன் படத்தையும் மணிரத்னம் இயக்கி இருந்தார். கேங்ஸ்டர் படமாக வெளியான நாயகன் படம் ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்தது. இந்நிலையில் காற்று வெளியிடை படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழித்த பொன்னியன் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார்.

மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் டீசர் வெளியீடு விழாவை தஞ்சை பெரிய கோயிலில் நடத்த மணிரத்னம் முடிவெடுத்துள்ளார். மேலும் இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளும் இந்த விழாவில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என மணிரத்னம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதுமட்டுமின்றி இப்படத்தின் ப்ரோமோஷனை பெரிய அளவில் செய்ய வேண்டும் என்பதற்காக மணிரத்னம் பெரிய ஸ்கெட்ச் போட்டு ரஜினி மற்றும் கமலஹாசன் இருவரையுமே விழாவிற்கு வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இவர்கள் இருவரும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடத்த மாட்டோம் என கங்கனம் கட்டிக்கொண்டு திரிகிறாராம் மணிரத்தினம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →