கவுண்டமணியை ஒதுக்கிய ரஜினி, கமல்.. திருப்பி அடித்த கர்மா

Goundamani: ஒரு காலகட்டத்தில் கவுண்டமணி படங்கள் இல்லாமல் தமிழ் சினிமாவே இல்லை என்ற நிலைமை இருந்தது. அதுமட்டுமின்றி ரஜினி, கமல் போன்ற ஹீரோக்களை வளர்த்து விட்டதில் கவுண்டமணிக்கும் பங்கு உண்டு. ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் எல்லோரும் ஒரே படத்தில் நடித்து வந்ததால் வாடா போடா என்று தான் கவுண்டமணி கூப்பிடுவாராம்.

மேலும் இவர்கள் அப்போது பெரிய ஹீரோக்கள் இல்லை என்பதால் ரஜினி மற்றும் கமல் கவுண்டமணி இப்படி கூப்பிடுவதை பொறுத்துக் கொண்டிருந்துள்ளனர். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இந்த இரு நடிகர்களுமே பெரும் நட்சத்திரமாக வளர்ந்து விட்டனர். அப்போதும் கவுண்டமணி படப்பிடிப்பு தளத்தில் ரஜினி மற்றும் கமலை வாடா போடா என்று அழைத்துள்ளார்.

இதனால் இவர்கள் கடுப்பாகி இனி தங்களது படத்தில் கவுண்டமணி நடிக்க கூடாது என்று கூறியுள்ளனர். அப்படியும் நடித்தால் அவருக்கென்று தனி ட்ராக் வையுங்கள். ஹீரோ உடன் காம்பினேஷன் வேண்டாம் என்று கூறியிருக்கின்றனர். அப்போது தான் கவுண்டமணி மற்றும் செந்தில் காம்பினேஷனில் படங்கள் வெளியாக தொடங்கியது.

அப்போது இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்தால் படம் 90% ஹிட் என்று தயாரிப்பாளர்கள் நம்ப ஆரம்பித்தனர். ஆகையால் ரஜினி மற்றும் கமல் படங்களில் இவர்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் வற்புறுத்த ஆரம்பித்தனர். அதன்பிறகு வேறு வழியில்லாமல் மீண்டும் தங்களது படங்களில் கவுண்டமணியை நடிக்க வைக்க டாப் ஹீரோக்கள் சம்மதித்தனர்.

ஆனால் அப்போதும் தனது குணத்தை சற்றும் மாற்றிக் கொள்ளாத கவுண்டமணி, ரஜினி மற்றும் கமல் போன்ற நடிகர்களை வாடா போடா என்று தான் அழைத்து வந்தார். அதன்படி மன்னன் படத்தில் ரஜினியை ஒருமையில் தான் பேசி இருப்பார். அதேபோல் பேர் சொல்லும் பிள்ளை மற்றும் சிங்காரவேலன் போன்ற படங்களில் கமலையே கவுண்டமணி ஒட்டி இருப்பார்.

ஆனால் கவுண்டமணி விஜயகாந்துக்கு எப்போதுமே மரியாதை கொடுக்கக் கூடியவர். மேலும் திறமை இருக்கும் இடத்தில் சற்று ஆணவமும் இருக்கத்தான் செய்கிறது. மேலும் கவுண்டமணியின் நகைச்சுவையை இப்போது ரசிகர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். அவரைப் போன்ற நகைச்சுவை செய்ய இப்போது ஆள் இல்லை.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →