மகளை நம்பிய ரஜினிக்கு கிடைத்த ஏமாற்றம்.. லால் சலாமால் ஏற்பட்ட வேதனை

Rajini – Lal Salaam : ரஜினி நெல்சன் படத்தில் நடிக்கும் போது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. அதாவது பீஸ்ட் படம் இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில் ரஜினி தேவையில்லாமல் நெல்சன் படத்தில் ஒப்பந்தம் ஆகிவிட்டார் என்று விமர்சித்தனர். ஆனா ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்ற ஸ்டைலில் தான் எடுத்த முடிவில் ரஜினி பின்வாங்கவில்லை.

அதற்கு கைமேல் பலனாக ஜெயிலர் படம் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்து வசூலை வாரிக் குவித்தது. இதைத்தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டதால் லால் சலாம் படத்தில் கேமியோ தோற்றத்தில் நடிக்க ரஜினி சம்மதித்தார். அந்த வகையில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்துள்ளாராம்.

நாளை லால் சலாம் படம் ரிலீஸாக உள்ள நிலையில் சினிமா விமர்சகர் அந்தணன் சில அதிர்ச்சி தரும் தகவலை கூறுகிறார். அதாவது லால் சலாம் படம் ரஜினிக்கு பிடிக்கவில்லையாம். தனது மகளை அழைத்து சில காட்சிகளை படத்தில் மாற்றுமாறு கூறியிருக்கிறாராம்.

அதன் பிறகு லால் சலாம் படத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் லால் சலாம் ட்ரெய்லரிலும் பெரிய அளவு எதுவும் ஈர்க்கவில்லை என்று அந்தணன் கூறியிருக்கிறார். அதாவது காலகாலமாக தமிழ் சினிமாவில் வரும் அதே பழைய கதை தான் ஐஸ்வர்யா உருட்டி இருக்கிறார்.

அதுவும் கிரிக்கெட்டில் மத கலவரம் என்பது சமீபத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் படத்திலும் இடம் பெற்றிருந்தது. அந்தப் படம் வந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் அதே ஜானரில் லால் சலாம் வெளியாகுவதால் ரசிகர்கள் எந்த அளவுக்கு இப்படத்தை கொண்டாடுவார்கள் என்பது சந்தேகம்தான்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →