நிற்க கூட நேரமில்லாமல் பறந்து கொண்டிருக்கும் சத்யராஜ்.. ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் இதுதான்

தற்போது கோலிவுட் திரையுலகில் பிசியான நடிகர் என்றால் அது சத்யராஜ் மட்டும் தான். அந்த அளவுக்கு அவர் நிற்க கூட நேரமில்லாமல் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் ஹீரோவாக பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த அவர் இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் முன்னணி நடிகர்களுக்கு அப்பா கதாபாத்திரம் என்றாலே அது சத்யராஜ் தான் என்று சொல்லும் அளவுக்கு அப்பா ரோல்களில் அவர் அசத்திக் கொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் இவருக்கு அதிக மவுசு இருக்கிறது.

அதனாலேயே தற்போது இவரின் கால்ஷூட்டுக்காக பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படத்தில் கூட இவருடைய கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. அது மட்டுமல்லாமல் தற்போது வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் லவ் டுடே திரைப்படத்திலும் இவர் ஹீரோயினுக்கு அப்பாவாக நடித்திருக்கிறார்.

கதையையே புரட்டிப் போடும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் அவருக்கு வரிசை கட்டி நிற்கின்றன. இப்படி பிசியாக நடித்து வரும் சத்யராஜின் சம்பளம் என்ன என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதன்படி சத்யராஜ் ஒரு திரைப்படத்திற்கு இரண்டு கோடி வரை சம்பளமாக பெறுகிறாராம். சமீபத்தில் அவர் நடித்த பிரின்ஸ் திரைப்படத்திற்கு இந்த சம்பளம் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை தொடர்ந்து தற்போது அவருக்கு மார்க்கெட் அதிகரித்து வருவதால் இப்போது அவர் மூன்று கோடி வரை தன்னுடைய சம்பளத்தை அதிகரித்துள்ளாராம்.

இருப்பினும் அவருக்கான வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. தன்னுடைய வயதிற்கு ஏற்றது போல் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் சத்யராஜ் தான் தற்போது முன்னணி நடிகர்களின் சாய்ஸாக இருக்கிறார். அதனாலே பல இளம் நடிகர்களும் இவருடன் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →