இதுவரை செய்யாத சாதனையை செய்த படம்.. பழைய பன்னீர் செல்வமாய் மாறிய ஷங்கர்

பிரம்மாண்ட படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் ஷங்கர். தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த ஷங்கர் சமீப காலமாக பல பிரச்சினைகளில் சிக்கி வந்தார். ஆரம்பத்தில் கமலஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார்.

சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு நின்று போனது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா மற்றும் ஷங்கர் இடையே கடும் பிரச்சினை நிலவி வந்தது. ஒருவழியாக தற்போது சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஷங்கரின் சொந்த வாழ்க்கையிலும் பல பிரச்சினைகள் உள்ளது.

அதாவது சங்கரின் மூத்த மகளுக்கு கடந்த ஆண்டு திருமணம் ஆனது. இதனால் இந்த ஆண்டு பிரம்மாண்டமாக ரிசப்ஷன் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அவரின் மருமகன் ரோகித் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது. இதனால் ரிஷப்ஷன் நின்றதோடு மட்டுமல்லாமல் ஷங்கர் மகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக உள்ளது.

இதுதவிர ஷங்கருக்கு இன்கம்டேக்ஸ் பிராப்ளம் என பல பிரச்சனைகளை சந்தித்து வந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அதாவது தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்போது ஷங்கருக்கு சந்தோஷம் தரும் வகையில் பல விஷயங்கள் நடந்து வருகிறது.

ஷங்கர் ராம் சரணை வைத்து இயக்கும் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அதற்கு முன்னதாகவே இப்படத்தின் வியாபாரம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. அதாவது இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ஆடியோ என அனைத்து கிட்டத்தட்ட 300 கோடிக்கு போயுள்ளதாம்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்த அளவுக்கு ரிலீசுக்கு முன்பே எந்த படமும் வியாபாரம் ஆகியது கிடையாது. ஆனால் ஷங்கரின் படம் ரிலீசுக்கு முன்பே பல கோடிகள் லாபம் பார்த்து உள்ளதால் தற்போது உச்சகட்ட மகிழ்ச்சி உள்ளாராம். மேலும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →