பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரணின் 15ஆவது படம் மற்றும் கமலஹாசனின் இந்தியன் 2 படங்களை இயக்கி வருகிறார். மாதத்தில் 30 நாட்களும் இந்த இரண்டு படங்களுக்கும் மாற்றி மாற்றி ஒதுக்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஷங்கர் நிறைய படங்களை தயாரித்து உள்ளார்.
இவர் கடைசியாக வடிவேலுவை வைத்து இம்சை 23ஆம் புலிகேசி படத்தை எடுக்க திட்டம் தீட்டி இருந்தார். ஆனால் அதற்குள் வடிவேலு மற்றும் ஷங்கர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட ஏகப்பட்ட நஷ்டம் இவருக்கு ஏற்பட்டது. மேலும் சங்கர் தயாரித்த படங்கள் மூலம் கிட்டத்தட்ட 18 கோடிக்கு மேல் நஷ்டம் அடைந்ததால் கடைசியில் ஒரு வீட்டை விட்டு தான் அந்த கடனை அடைத்தார்.
ஆகையால் இனிமேல் படத்தை தயாரிக்க கூடாது என்ற முடிவில் ஷங்கர் உறுதியாக இருந்தார். இப்போது இந்தியன் 2 வில் படு பிஸியாக இருக்கும் ஷங்கர் அவருடன் வேலை பார்க்கும் வசந்த பாலன் அநீதி என்ற படத்தை இயக்கி, தயாரித்துள்ளார்.
இந்நிலையில் அநீதி படத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. அதில் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.
அதாவது வசந்தபாலன் ஷங்கரிடம் தனது படத்தை வெளியிட முடியவில்லை என புலம்பி உள்ளார். உடனே ஷங்கரும் அநீதி படத்தை பார்த்துள்ளார். அந்த படம் இவருக்கு ரொம்ப பிடித்து உள்ளதாம். ஆகையால் உடனே ஷங்கர் அநீதி படத்தை நான் விநியோகம் செய்கிறேன் என்று உறுதியளித்தாராம்.
கண்டிப்பாக இந்த படம் 100% வெற்றி உறுதி என்பதால் தான் ஷங்கர் இந்த படத்தை வெளியிட சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் பல கோடி நஷ்டத்திற்கு பிறகு நட்புக்காக இவ்வளவு பெரிய முடிவு எடுத்தது பெரிய விஷயம் தான். மேலும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும்.