நயன்தாராவை விடாமல் துரத்தும் சிம்பு.. பத்து தல இசை வெளியீட்டு விழாவில் நடந்த சுவாரஸ்யம்

சிம்புக்கு தற்போது தொட்டதெல்லாம் பொன்னாகிறது. அதாவது சிம்புவின் படங்கள் தொடர் வெற்றி அடைந்து வருவதால் அவரது மார்க்கெட் உச்சம் தொட்டுள்ளது. அதுமட்டுமின்றி சம்பளத்தையும் இப்போது அதிகபடியாக உயர்த்தி உள்ளார். இந்நிலையில் மார்ச் 30ஆம் தேதி சிம்புவின் பத்து தல படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ரசிகர்களிடம் சிம்பு பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது எனக்காக இனிமேல் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் சண்டையிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இனிமேல் எனக்காக நீங்க எதுவுமே செய்ய வேண்டாம். நான் கஷ்டப்பட்ட போது நீங்கள் தான் மீண்டும் வருவேன் என்று ஊக்கப்படுத்தினீர்கள். இனி உங்களை சந்தோஷப்படுத்துவது தான் என்னோட வேலை என்று சிம்பு பேசி இருந்தார். எப்போதுமே தன்னுடைய படங்களில் நயன் சென்டிமென்டை சிம்பு பார்ப்பது வழக்கம்.

அந்த வகையில் மாநாடு படத்தின் டிரைலர் வெளியிடும் நேரம் கூட ஒன்பதாக இருந்தது. அதுமட்டுமின்றி ஒன்பதாவது இருக்கை தான் சிம்புவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. நயன்தாராவுக்கு திருமணமாகி குடும்பம், குழந்தை என செட்டில் ஆகிவிட்டார்.

ஆனால் இப்போதும் நயன்தாராவை மனதில் வைத்து பத்து தல இசை வெளியீட்டு விழாவில் வல்லவன் படத்தில் இடம்பெற்ற லூசு பெண்ணே பாடலை சிம்பு பாடியிருந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் கரகோஷம் எழுந்தது. சிம்பு காதலித்த நயன்தாரா மற்றும் ஹன்சிகா இருவருக்குமே இப்போது திருமணம் ஆகிவிட்டது.

ஆனால் தலைவன் சிம்பு மட்டும் தற்போது வரை சிங்கிளாக இருப்பது அவரது குடும்பம் மற்றும் ரசிகர்களுக்கு வேதனையை தருகிறது. மேலும் சிம்புவின் பத்து தல படத்திற்காக மட்டுமன்றி அவரின் திருமணச் செய்திகாகவும் அவரது ரசிகர்கள் ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →