வாரிசு படத்தில் இணையும் சிம்பு.. சீக்ரெட்டாக நடக்கும் வேலை

விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் பயங்கர எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. வம்சி இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் ஆந்திராவிலும் உச்சகட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் நடிகர் சிம்பு இத்திரைப்படத்தில் இணைந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது சிம்பு வாரிசு திரைப்படத்தில் ஒரு பாடலை பாட இருக்கிறாராம். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளிவந்த ஃபர்ஸ்ட் சிங்கிள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. விஜய்யின் குரலில் ரஞ்சிதமே என்று தொடங்கும் அந்த பாடல் இப்போது சோசியல் மீடியாக்களில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

அதைத்தொடர்ந்து சிம்புவும் தற்போது இந்த திரைப்படத்தில் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கும் மற்றும் ஒரு பாடல் சிம்புவின் குரலில் தயாராக இருக்கிறது. இதில் யாரும் எதிர்பார்க்காத மற்றொரு சர்ப்ரைஸும் இருக்கிறது.

என்னவென்றால் இந்த பாடலில் சிம்பு விஜய் உடன் இணைந்து ஒரு காட்சியில் டான்சும் ஆட இருக்கிறாராம். இதற்கு முன்னதாக சிம்பு மற்ற நடிகர்களின் திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடி இருக்கிறார். ஆனால் இது போன்று ஹீரோக்களுடன் இணைந்து ஆடியது கிடையாது. அந்த வகையில் சிம்பு விஜய்க்காக மட்டுமே இதை செய்ய இருக்கிறாராம்.

ஆனால் இந்த விஷயத்தை பட குழு பயங்கர சீக்ரெட்டாக வைத்திருக்கின்றனர். ஏற்கனவே வாரிசு திரைப்படத்திலிருந்து பல போட்டோக்கள் லீக் ஆகி விஜய்யை டென்ஷன் படுத்தியது. அதனால் சிம்பு இந்த திரைப்படத்தில் இணைய இருக்கும் செய்தி பரம ரகசியமாக காக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் தற்போது இந்த தகவல் மீடியாக்களில் வெளியாகி உள்ளது. இது படத்திற்கான இலவச ப்ரமோஷன் ஆகவும் மாறி இருக்கிறது. ஏற்கனவே திரைப்படத்தில் பலரும் ஆச்சரியப்படும் அளவுக்கு ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கின்றனர். அந்த வகையில் சிம்புவின் வரவும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →