தமிழ் சினிமாவில் எப்போதும் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் தனி ஸ்டைல் கொண்டவர் STR. தற்போது அவர் நடிக்கும் STR49 குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. காரணம் – வெளியான One Line கதைக்கான மாசான அப்டேட்.
கதைப்படி, சிறுவயதில் இரண்டு நெருங்கிய நண்பர்கள். ஒருவர் ரவுடிசம், கட்டப்பஞ்சாயத்து, கேங்ஸ்டர் என ஒரு பாதையில் சென்றுவிடுகிறார், மற்றொருவர் கல்லூரி படிப்பைத் தொடர்கிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் இருவரும் மீண்டும் சந்திக்கிறார்கள். இந்தக் கதையம்சம், தனுஷ் நடித்த ‘வடசென்னை’ படத்தை நினைவூட்டுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ரசிகர்கள் பலரும், “இந்த ஸ்டோரி STR-க்கு சூப்பராக செட்டாகும்”, “சிம்புவின் நடிப்பு பிளஸ் தர லோக்கல் ஆன கேங்ஸ்டர் படமாக வந்தால் வடசென்னையை மிஞ்சும்” என சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிர்ந்து வருகின்றனர்.
STR 49-க்கு உள்ள பெரிய எதிர்பார்ப்பு
சிம்பு கடந்த சில வருடங்களில் தேர்ந்தெடுத்த படங்கள் – மாநாடு, வெந்து தனிந்தது காடு, பத்து தல படம் ஆகியவை – அவரின் கேரியரை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றன. அந்த வரிசையில் STR 49, சிம்புவின் ரசிகர்களுக்கு இன்னொரு பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.
மேலும், “இந்தக் கதையில் தனுஷும், STR-ம் இணையும் வாய்ப்பு இருக்கிறதா?” என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இப்படம் Kollywood இல் ஒரு ‘Massive Collaboration’ ஆக உருவாகும் வாய்ப்பு அதிகம்.
வடசென்னை கனெக்ட் – Hype அதிகரிக்கும் காரணம்!
வடசென்னை படம் தமிழ் சினிமாவில் ஒரு தனித்தன்மையை ஏற்படுத்தியது. அந்த வாசனையுடன் STR 49 வந்தால், அது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மட்டுமின்றி, பாக்ஸ் ஆபிஸிலும் அதிரடி சாதனைகள் செய்யும் என கூறப்படுகிறது.
இப்போது ரசிகர்கள் கேட்கிற ஒரே கேள்வி:
STR 49 க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?
படத்தில் யார் இணைகிறார்கள்?
இது வடசென்னை ஸ்டைல் கதையாக வருமா?
இந்தக் கேள்விகளுக்கான பதில் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.