லீக் ஆன சிவகார்த்திகேயனின் பராசக்தி பட கதை.. தமிழகமே கொண்டாடிய கல்லூரி மாணவர், யார் இந்த ராஜேந்திரன்?

Sivakarthikeyan: அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா என்ற பாடல் வரியுடன் சிவகார்த்திகேயன் நடந்து வந்தது எத்தனை கம்பீரம்.

நேற்று பராசக்தி படத்தின் டீசர் வீடியோ வெளியாகி இருந்தது. படம் முழுக்க முழுக்க கல்லூரி புரட்சியை மையப்படுத்தி எடுக்கப்படுவது அந்த வீடியோவிலேயே தெரிந்தது.

அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே இது இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது என செய்திகள் வெளியாகி வந்தது.

இந்த நிலையில் படத்தின் கதை லீக் ஆகி இருக்கிறது. சிவகார்த்திகேயனின் புரட்சி ஹீரோயிசம், அழகான காதல், அரசியல் களம் என்றெல்லாம் கிடையாது.

யார் இந்த ராஜேந்திரன்?

அமரன் படத்தைப் போலவே பராசக்தி படமும் பயோபிக் தான். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர் ராஜேந்திரனின் வரலாறு.

இந்தி திணிப்பு எதிர்ப்பு போரில் காவல்துறையின் துப்பாக்கி குண்டுகளுக்கு தன் உயிரை இழந்த கல்லூரி மாணவர்.

1965 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி இந்திய திணிப்பு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தீக்குளித்த இளைஞர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு ஒரு பேரணி நடந்தது.

மேலும் பக்தவச்சலம் கீழ் அமைந்த அரசை கண்டித்தும் தான் அந்த பேரனை நடந்தது. அப்போது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் நெற்றியில் குண்டு பாய்ந்து ராஜேந்திரன் உயிரிழந்தார்.

இவரது உடல் பரங்கிப்பேட்டையில் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் ராஜேந்திரனை கௌரவிக்கும் விதமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அவருடைய திரு உருவப்படத்தை கலைஞர் கருணாநிதி திறந்து வைத்தார். இதிலிருந்து இந்த படத்தின் கிளைமாக்ஸ் சிலும் சிவகார்த்திகேயன் கேரக்டர் இறந்து விடும் என்பது தெரிகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment