அடுத்தடுத்த வெற்றியால் உச்சாணி கொம்புக்கு சென்ற சிவகார்த்திகேயன்.. ஓவர் நைட்டில் சறுக்கி விட்ட பிரின்ஸ்

சின்னத்திரையில் இருந்து வந்த டாப் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு ஒருவரால் உயர முடியும் என்பது சாதாரண விஷயம் கிடையாது. திறமை, விடாமுயற்சி என அவரது உழைப்பால் மட்டுமே அந்த இடத்தை பிடிக்க முடியும். அதுமட்டுமின்றி அவர் கடந்து வந்த பாதையில் மிகுந்த அவமானங்களும் சந்தித்திருக்க கூடும்.

அவ்வாறு சின்னத்திரையில் செல்ல பிள்ளையாக வலம் வந்த சிவகார்த்திகேயன் வெள்ளித்திரையில் ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோவாக மாறினார். ஆரம்பத்தில் ஒரே மாதிரியான படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சில படங்கள் தொடர் தோல்வியை தழுவி வந்ததால் மிகுந்த பணம் நெருக்கடியில் இருந்து வந்தார். அப்போது டாக்டர், டான் என அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்கள் வசூலை வாரி குவித்து வந்தது. அப்பாடா விட்ட இடத்தை பிடித்து விட்டோம் என்று இப்போதுதான் சிவகார்த்திகேயன் பெருமூச்சு விட்டார்.

அதற்குள்ளாகவே உச்சாணி கொம்பிலிருந்து அடிமட்டத்திற்கு வர வைத்தது சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்தது.

பிரின்ஸ் படத்திற்கு திரையரங்குகளில் கூட்டம் இல்லாத காரணத்தினால் சில தியேட்டர்களிலிருந்து இப்படத்தை எடுத்துவிட்டார்கள். ஒரு முன்னணி ஹீரோவின் படத்திற்கு இந்த நிலைமையா என பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர். மேலும் பிரின்ஸ் படத்தின் தயாரிப்பாளரும் தற்போது சிவகார்த்திகேயன் தான் படத்தின் தோல்விக்கு என்பது போல கூறி வருகிறார்கள்.

இவ்வாறு டாப் இடத்தில் இருந்து சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தால் ஓவர் நைட்டில் சறுக்கி விழுந்துள்ளார். இந்நிலையில் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என சிவகார்த்திகேயன் போராடி வருகிறார். அயலான் படமாவது சிவகார்த்திகேயனை தூக்கி விடுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →