பராசக்தி முடிந்த கையோடு.. 5 ஹிட் கொடுத்த இயக்குனரை பிடித்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் : பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கான அப்டேட் கிடைத்துள்ளது. சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தன் உழைப்பால் தமிழ் சினிமாவில் நிரந்தர கால் தடம் பதித்துள்ளார் .இவர் அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து “பராசக்தி” படத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் பராசக்தி படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து இவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் “மதராசி” படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் “பராசக்தி” படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறை விசாரணையில் இருப்பதால் “பராசக்தி” படப்பிடிப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

யார் அந்த பிரபல இயக்குனர் ?

இவ்வாறு இருந்து கொண்டிருக்க சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கான அப்டேட் கிடைத்துள்ளது. இந்தப் படத்தை இயக்கப் போகும் அந்த பிரபல இயக்குனர் யார் என்று பார்த்தால் “குட் நைட்” படத்தை இயக்கிப பிரபலமான விநாயக் சந்திரசேகர் தான். குரட்டையை மையமாகக் கொண்டு அழகான ஒரு காதல் கதையை குடும்ப பாணியில் எடுத்து பெரும் ஹிட் அடித்த “குட் நைட்” படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த இயக்குனரின் கதைக்களம் முற்றிலும் வேறுபட்டதாகவும், எதார்த்தமாகவும் இருந்ததால் அனைவரையும் கவர்ந்தது. எதார்த்தமான நடிப்பு என்பது சிவகார்த்திகேயனுக்கு கைவந்த கலை, ஆகையால் சிவகார்த்திகேயன் மற்றும் விநாயக் சந்திரசேகர் கூட்டணி போட்டு இயக்கப் போகும் இந்த படமும் பெரிய ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான அப்டேட் கூடிய விரைவில் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் காதல் கதைக்களம் கொண்ட புதிய படத்தில் நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இதனுடைய அப்டேட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் .

இவ்வாறாக சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுக்கும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் இவரை தமிழ் சினிமாவில் மேலும் உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை . ஒவ்வொரு படமாக அவர் தன்னை மேலும் மெருகேற்றிக் கொண்டிருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →