புது இயக்குனருக்கு மாவீரன் போடும் கட்டளை..! முருகதாஸிடம் பலிக்காத சிவகார்த்திகேயனின் பாட்சா!

Sivakarthikeyan’s order to SK 24 director: “என் முன்னாடி சுக்கிரன், கைய கட்டி நிக்கிறான்” என எந்த நேரத்தில் சொன்னாரோ சிறப்பாக பலித்து வருகிறது சிவகார்த்திகேயனின் வாய் முகூர்த்தம். கடந்த ஆண்டு வெளியான சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

அடுத்ததாக நீண்ட உருவாக்கத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் வித்தியாசமான புது முயற்சியாக கடந்த பொங்கலை ஒட்டி வெளியான அயலான், குடும்பங்கள் கொண்டாடும் படமாக வெற்றி பெற்றது. 

அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வெற்றி இயக்குனர்கள், முன்னணி தயாரிப்பாளர்கள் என சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் உயர்ந்து கொண்டேசெல்கிறது. 

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் எஸ்.கே 21 எனப்படும் அமரன் திரைப்படத்தில் ராஜ்குமார் பெரியசாமி உடன் இணைந்தார் சிவகார்த்திகேயன். 

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்  கொண்டு உருவாகும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்றது. ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு அமரன் ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

அமரன் படப்பிடிப்பு முடியும் தருவாயில் எஸ்கே 23 காக ஏ ஆர் முருகதாஸ் உடன் கைகோர்த்தார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் படத்திற்கான பூஜை போடப்பட்டு விறுவிறுவென ரெடியாகி வருகிறது எஸ்.கே 23. 

சிவகார்த்திகேயன் இதுவரை நடித்தீராத, காமெடி கலக்காத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் தோன்ற உள்ளாராம். இதனால் இவருக்கென தனியாக பயிற்சியாளர் நியமித்து வேற லெவல்ல ரெடி பண்ணி வருகிறார் ஏ ஆர் முருகதாஸ். 

குட்நைட் இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்

இப்படத்தின் படப்பிடிப்பின் இடையே  கடந்த ஆண்டு குறைந்த பட்ஜெட்டில் தயாராகி மாபெரும் வெற்றி பெற்ற குட்நைட் படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகரிடம் கதை கேட்டு உள்ளார் சிவகார்த்திகேயன்.

கதை கேட்வுடன் பிடித்து விட்டதால் உடனே ஓகே சொல்லி இயக்குனரை லாக் செய்து விட்டார் சிவா. ஏ.ஆர் முருகதாஸின் கட்டளைக் களுக்கெல்லாம் கப் சிப் என வாயை மூடிக்கொள்ளும் சிவா, விநாயக் சந்திரசேகர் உடனான படத்தில் நடனத்துடன் கூடிய நிறைய சாங்ஸ் வேணும் என கட்டளை போடுகிறாராம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →