என்ட்ரி டோக்கனுக்கு பின்னால் எஸ்கே செய்யும் வேலை.. படை பலத்தோடு களத்தில் இறங்கிய ரஜினி முருகன்

சிவகார்த்திகேயன் பார்க்காத மேடையே இல்லை. சினிமாவில் இன்று ஆலமரம் போல் வளர்ந்து நிற்கும் இவரை வருங்கால சினிமா எதிர்காலமாய் நிலை நிறுத்த பார்க்கிறார்கள். அஜித், விஜய் இடத்திற்கு பின் திரை துறையை ஆள்வதற்கு ஆள் வேண்டும்.

விஜய் அஜித்துக்கு பின் அதிக ரசிகர் பட்டாளம் இருக்கக்கூடிய ஹீரோவாக சிவகார்த்திகேயனை பார்க்கிறார்கள். ஐந்து வயது குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை நம்ம வீட்டுப் பிள்ளையாக இவரை பார்க்கிறார்கள். சாதாரண மேடைப் பேச்சாளராக இருந்த இவர் இன்று இருக்கும் இடமே வேறு.

சிவகார்த்திகேயன் நடித்த படங்களுக்கு ஏதாவது நிதி நெருக்கடி பிரச்சனை ஏற்பட்டால் அவரே இறங்கி அதை தீர்த்து வைப்பார். அதற்காக எவ்வளவு பணம் தேவைப்பட்டாலும் பொறுப்பேற்று கையெழுத்தும் போட்டிருக்கிறார். மற்ற ஹீரோக்கள் நமக்கு ஏன் வம்பு என ஒதுங்கி போகையில் சிவகார்த்திகேயனின் இறங்கி போராடும் குணத்தை பார்த்து விஜய் பலமுறை வியந்து போய் உள்ளாராம்.

விஜய் அவர் மேனேஜரிடம், சிவாவிற்கு ஏதாவது நிதி உதவி வேண்டுமானால் பண்ணலாம் என கூறியுள்ளார். இப்படி தளபதி மனதில் இடம் பெற்ற அவர் விஜய்யின் கோட் படத்திலும் நடித்தார். அந்தப் படத்தில், விஜய்யின் இடம் எனக்குத்தான் என்பது போல் ஒரு வசனமும் பேசியுள்ளார். விஜய்யை பார்த்து உங்களுக்கு முக்கியமான வேலை இருக்கிறது, இப்போது இந்த வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன் என சூசகமாக தளபதி அரசியலுக்கு செல்வதையும், இவர் விஜய் இடத்தை பூர்த்தி செய்வதுமாய் அந்த வசனம் அமைந்துள்ளது. இப்படி ஒரு டோக்கனை விஜய்யே போட்டுக் கொடுத்துள்ளார்.

படை பலத்தோடு களத்தில் இறங்கிய ரஜினி முருகன்

இப்பொழுது மறைமுகமாக சிவகார்த்திகேயன்தன் வைத்திருக்கும் கூலிப்படைகளின் வேளையை மும்மரமாக்கி உள்ளாராம். அடுத்த விஜய் இடத்தை தான் பிடிப்பதற்கு என்னென்ன வேலைகள் உண்டு அதை அனைத்தும் செய்து வருகிறாராம்.அஜித்தும் கார் ரேஸில் கலந்து கொள்வதால் இது எளிதில் சாத்தியமாகும் என கூலிப்படைகளை முடுக்கி விட்டிருக்கிறார்.

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →

Leave a Comment