டிஆர்பி-காக புதிய படங்களை களமிறக்கும் 3 சேனல்கள்.. இது என்னடா வலிமைக்கு வந்த சோதனை

பொதுவாக சின்னத்திரை ரசிகர்களை கவர்வதற்காகவே விடுமுறை தினத்தையும் பண்டிகை நாட்களையும் குறிவைத்து தனியார் சேனல்கள் திரைக்கு வந்த சில நாட்களே ஆன புத்தம் புது படங்களை ஒளிபரப்பும். அந்த வகையில் மே ஒன்றாம் தேதி அன்று உலகெங்கும் கொண்டாடப்படும் உழைப்பாளிகள் தினம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது

ஆகையால் அன்றைய தினத்தை குறிவைத்து பல புதுப்படங்களை தொலைக்காட்சியில் முக்கியமான சேனல்கள் ஒளிபரப்பாகிறது. ஏற்கனவே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தல அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆன ஆக்சன் திரில்லர் படமான ‘வலிமை’ படம் வருகிற மே ஒன்றாம் தேதி ஜீ தமிழில் ஒளிபரப்பப்படுகிறது.

உடனே சன்டிவி நாங்கள் மட்டும் என்ன சும்மாவா, நாங்களும் புது படத்தை போட்டு டிஆர்பி ஏற்றிக்கொள்வோம் என்று அதற்கு போட்டியாக சூர்யா நடித்து வெளிவந்த புத்தம்புது படமான ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை ஒளிபரப்ப உள்ளது.

நீங்களெல்லாம் எங்களுக்கு பின்னால் தான் என்று விஜய் டிவி அவர்களுக்கு போட்டியாக சிம்பு நடித்து மெகா ஹிட்டான ‘மாநாடு’ படத்தை ஒளிபரப்புகிறது. இப்படி தொடர்ந்து ஒரே நாளில் மாநாடு, வலிமை, எதற்கும் துணிந்தவன் என மூன்று படத்தையும் போட்டால் எந்த படத்தை பார்ப்பது என தெரியாமல் சிலர் மூன்றையும் குழப்பி குழப்பி பார்க்க போகின்றனர்.

இருப்பினும் இந்த 3 படத்தில் ஜீ தமிழ் தான் சீரியலில் விட்டதை, தல அஜித்தின் படத்தை போட்டாவது டிஆர்பியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலிமை படத்தை வைத்து ஜீதமிழ் கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறது.

இதுமட்டுமின்றி விதவிதமான சுவாரஸ்யத்தைக் கூட்டும் ரியாலிட்டி ஷோக்களும் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு சின்னத்திரை ரசிகர்களை ஈர்ப்பதற்காக பிளான் போட்டு ஒளிபரப்ப உள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →