கிண்டல் செய்தவரை வாழ்ந்துட்டு போ என கூப்பிட்டு பாராட்டிய ரஜினி.. கண்கலங்கிய இளம் ஹீரோ!

கிட்டதட்ட 40 ஆண்டுகளாக கோலிவுட்டில் டாப் ஒன் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்தி கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த. 72 வயதிலும் நிற்காத குதிரையாக ஓடிக் கொண்டிருக்கிறார். ரஜினி சமீப காலமாகவே இளம் இயக்குனர்களின் படங்களுக்கு ஆதரவு கொடுப்பதோடு அவர்களை நேரில் அழைத்து பாராட்டி வருகிறார்.

கன்னட மொழிப் படமான காந்தார திரைப்படத்தை பார்த்து அந்த படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார். சமீபத்தில் அவர் அப்படி நேரில் சந்தித்து பாராட்டிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் தன்னுடைய லவ் டுடே படத்தின் மூலம் பயங்கர பேமஸ் ஆகி விட்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரதீப்பை நேரில் அழைத்து பாராட்டிய சம்பவத்தை பற்றி பேசிய அவர், முதலில் தனக்கு ரஜினி போன் பண்ணி பேசி பாராட்டியதாகவும், பின்னர் நாளையே தன்னை வந்து பார்க்குமாறு கூறியதாகவும் சொல்லியிருக்கிறார். மேலும் ரஜினிகாந்த் தனக்கு பொன்னாடை அணிவிப்பர் என எதிர்பார்க்கவே இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால் பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய முதல் படமான கோமாளி படத்தில் ரஜினியையும், அவர் அரசியல் பற்றி பேசுவதையும் பங்கமாக கலாய்த்து இருப்பார். முதலில் அந்த வசனம் சென்சார் இல்லாமல் தான் ட்ரெய்லரில் வந்தது. உலகநாயகன் கமல்ஹாசன் தான் அந்த படத்தின் ஹீரோ ஜெயம் ரவியை தனிப்பட்ட முறையில் அழைத்து அந்த வசனத்தை நீக்கும்படி கூறியிருந்தார்

பிரதீப் ரங்கநாதன் ரஜினியை சந்தித்தபோது அவர் படத்தை பாராட்டியதோடு ரொம்ப பாசிட்டிவாக நீங்கள் அந்த படத்தில் என்னை கிண்டல் செய்ததை நான் பார்த்தேன், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியிருக்கிறார். இதை பற்றி பகிரும் போது பிரதீப் ரொம்பவும் மனம் நெகிழ்ந்து அந்த சம்பவத்தை கூறியிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் இருக்கும் லெவலுக்கு பிரதீப்பை நேரில் சந்தித்து வாழ்த்தியதோடு, தன்னை கிண்டல் செய்ததை கூட பொருட்படுத்தாமல் அவரை வாழ்த்தி பேசியிருக்கிறார். இதுபோன்ற குணம் தலைவரை தவிர யாருக்கும் வராது. பிரதீப் இதை அப்படியே நீடித்து கொள்ளாமல் மீண்டும் கிண்டல், கலாய் என்று ரஜினி பக்கம் இறங்கினால் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு போக வேண்டிதான்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →