பச்சைக்கொடி காட்டிய சிம்பு.. உடல்நிலை தேறிய டிஆர் செல்லும் இடம்

சிம்பு தற்போது பிசியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். விரைவில் இவரின் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கியிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாக இருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தை காண சிம்புவின் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சிம்பு தன்னுடைய திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டி விட்டாராம். 39 வயதாகும் சிம்பு இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே சுற்றிக் கொண்டிருக்கிறார். அவருடைய தம்பி மற்றும் தங்கைக்கு கூட திருமணம் முடிந்த நிலையில் இவர் மட்டும் தன்னுடைய திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறார்.

இதற்கு அவருடைய காதல் தோல்வியும் ஒரு காரணம். இது அவருடைய அப்பா டி ராஜேந்தருக்கு மிகுந்த மன வருத்தத்தை கொடுத்துள்ளதாம். அது மட்டுமல்லாமல் பார்ப்பவர்கள் எல்லோரும் ஏன் இன்னும் சிம்பு திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று கேள்வியை தான் தொடர்ந்து கேட்டு வருகிறார்களாம்.

அதனால் வேதனை அடைந்த டி ஆர் தன் மகனிடம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கண்டிப்பாக கூறிவிட்டாராம். அப்பாவின் பேச்சை மீற முடியாத சிம்புவும் தற்போது தன்னுடைய திருமணத்திற்கு சம்மதித்து விட்டாராம். இதனால் சந்தோஷம் அடைந்த அவரின் குடும்பம் சொந்த ஊரை நோக்கி படையெடுத்து உள்ளார்களாம்.

டி ஆர் பிறந்து வளர்ந்ததெல்லாம் மயிலாடுதுறையில் தான். அதனால் அவர் தன்னுடைய மகனுக்கு சொந்த ஊரில் பெண் பார்க்கலாம் என்ற முடிவில் இருக்கிறாராம். அதற்காக சிம்புவின் அம்மா மற்றும் தங்கை இருவரும் அடிக்கடி மயிலாடுதுறைக்கு சென்று வருகிறார்கள்.

மேலும் நெருங்கிய சொந்தங்களிலும் மணப்பெண் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்களாம். கூடிய விரைவில் சிம்பு மனசு மாறுவதற்குள் அவருக்கு ஏற்ற பெண்ணை முடிவு செய்து திருமணத்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் சிம்புவின் திருமண அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அவரின் ரசிகர்களை தற்போது மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →