3 மாத கை குழந்தையாக வைரலாகும் ‘பிலடி ஸ்வீட்’ விஜய்யின் புகைப்படம்.. செம்ம க்யூட்!

நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் முதலிடத்தில் இருக்கும் மாஸ் ஹீரோ. மேலும் பாக்ஸ் ஆபிசின் கிங் மேக்கர் என்று கூட இவரை சொல்லலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறகு தளபதி விஜய்யின் படங்கள் தான் அடுத்தடுத்து கோடிகளில் வசூலை அள்ளியிருக்கின்றன. தமிழ்நாடு மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் இவருக்கென்று ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறார்கள்.

என்னதான் சினிமா பின்புலம் இருந்தாலும் ஆரம்ப காலங்களில் இவர் ரொம்பவே கஷ்டப்பட்டு தான் சினிமாவில் தன்னை நிலைநிறுத்தி கொண்டார். பூவே உனக்காக திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யின் ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கையும் தலைகீழாய் மாறிவிட்டது. நடிகனாய் ஆரம்பித்த விஜய்யின் வாழ்க்கை அரசியலை நோக்கி போக வேண்டும் என்பது அவருடைய ரசிகர்களின் கனவாக இருக்கிறது.

விஜய் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இல்லை என்றாலும் அவ்வப்போது அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளின் புகைப்படம் மற்றும் அவருடைய பழைய புகைப்படங்கள் எப்படியாவது வெளியே வந்துவிடும். அப்படி வெளியாகும் தளபதி விஜய்யின் புகைப்படங்கள் அடுத்த சில தினங்களுக்கு நெருப்பு பற்றி கொள்வதுபோல் இன்டர்நெட்டை வலம் வரும்.

அந்த வகையில் தளபதி விஜய்யின் புகைப்படம் ஒன்று நெட்டிசன்கள் கைகளில் சிக்கி பயங்கர வைரலாகி கொண்டிருக்கிறது. நடிகர் விஜய் மூன்று மாத கை குழந்தையாக இருக்கும் புகைப்படம் தான் அது. மூன்று மாத கை குழந்தையான விஜய்யை அவருடைய அம்மா சோபா சந்திரசேகர் தொட்டிலில் போடுவது போல் இந்த புகைப்படம் இருக்கிறது.

ரொம்ப க்யூட்டாக இருக்கும் இந்த புகைப்படத்தை தற்போது விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குழைந்தையாக இருக்கும் போட்டோவிலும் கூட தளபதி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து கொண்டு தான் இருக்கிறார். இதுபோன்று விஜய்யின் நிறைய குழந்தை கால திரைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் இதற்கு முன்பும் வெளியாகி இருக்கிறது.

தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலி கான், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இந்த படம் வரும் அக்டோபரில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →