3 லட்சத்தை ஒவ்வொரு படத்திலும் விட்டுக் கொடுத்த கேப்டன்.. தக்காளி சோறு கொடுத்து ஏமாற்றிய கமல்

சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த கேப்டன் விஜயகாந்த் ரசிகர்களின் மனதில் எப்போதுமே டாப்பு தான். அவர் பெரிய மனசுக்காரன் என பலரும் பாராட்டினாலும், தற்போது கேப்டன் அவர்கள் தான் செய்த ஒரு காரியத்தால் எவ்வளவு உயர்ந்த மனிதர் என்பதை காட்டியுள்ளார்.

ஏழை பணக்காரர் என பாகுபாடு பார்க்கும் இந்த காலகட்டத்தில், 80-களில் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் போதே தன்னுடன் வேலை செய்யும் பணியாளர்களுக்கு உணவை தாராளமாக வாரி வழங்கியுள்ளாராம். அதிலும் சாதாரணமாக சாப்பாடு போடக்கூடாது என கறி விருந்து வழங்கி படத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வயிறு நிறைய சாப்பாடு போடுவார்.

இவருடைய படத்தை இயக்கும் இயக்குனர்கள், சாப்பாடு போட்டே பட்ஜெட்டை காலி செய்து விடுவார் என எண்ணக்கூடாது என்பதற்காகவே அவருடைய ஒரு படத்திற்கும் 3 லட்சம் வரை எடுத்து பணியாளர்களுக்கு சிறந்த கறி விருந்து அளிக்குமாறு அதுவும் அன்லிமிட்டட் ஆக அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளாராம்.

அதுமட்டுமின்றி பந்தி நடக்கும் போது உணவு பரிமாறும் இடத்திற்கே சென்று சரியாக கவனித்துக் கொள்கிறார்களா என்றும் பார்த்துவிட்டு பிறகு அவர்களுடைய அமர்ந்து சாப்பிடுவார். ஆனால் அதே காலகட்டத்தில் இவரை விட அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ரஜினி, கமல் எல்லாம் தன்னுடைய புரொடக்சன் டீமுக்கு தக்காளி சோறு, தயிர் சோறு பொட்டலம் கட்டி கொடுத்தனர்.

அதிலும் உலகநாயகன் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த நாயகன் படப்பிடிப்பும், விஜயகாந்தின் படமும் அடுத்தடுத்த செட்டில் நடந்து கொண்டிருந்தது. அப்போது கமலஹாசன் புரொடக்சன் டீமுக்கு தக்காளி சோறு கட்டிக் கொடுத்தார். ஆனால் விஜயகாந்த் தன்னுடைய படத்தில் பணி புரியும் பணியாளர்களுக்கு அன்லிமிடெட் கறி விருந்து தான் தருவேன் என சொல்லில் மட்டுமல்ல செயலிலும் காட்டியது வியக்க வைத்தார்.

ஒரு நடிகரும் தனது சம்பளத்தில் தனது தலைமுறை எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்ல முறையில் வாழ வேண்டும் என ப்ளூ பிரிண்ட் போட்டுக் காட்டி கொண்டிருக்கும்போது, இவரின் இந்த நெகிழ்ச்சி அடைய செய்யும் செயல் ரஜினி கமலேயே தூக்கி சாப்பிட செய்துள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →