ரஜினியை தன் பாணியில் மிரட்டி பணிய வைத்த கேப்டன்.. பதறிப் போய் இறங்கி வந்த சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவில் தன்னுடைய திறமையால் முன்னணி இடத்திற்கு வந்த விஜயகாந்துக்கு ரஜினி, கமலுக்கு இணையான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ரஜினி, கமலையே ஓவர் டேக் செய்யும் அளவுக்கு இவர் ஒரே வருடத்தில் 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்திருக்கிறார்.

நடிப்பில் எந்த அளவுக்கு அவர் தத்ரூபமாக நடிப்பாரோ, அதேபோன்று நடிகர் சங்கத்தை தன்னுடைய ஆளுமையால் பிரச்சினையிலிருந்து மீட்டு வந்த பெருமையும் அவருக்கு உண்டு. பல வருடங்களுக்கு முன் நடிகர் சங்கம் கடனில் தத்தளித்து கொண்டிருந்தபோது அப்போது தலைவராக இருந்த விஜயகாந்த் தான் அத்தனை கடனையும் அடைத்து நடிகர் சங்கத்தை காப்பாற்றி இருக்கிறார்.

அதை இப்போது வரை நடிகர்கள் பலரும் பெருமையாக கூறுவதுண்டு. அதேபோல துணை நடிகர்களுக்கும் ஏராளமான உதவிகளை இவர் செய்திருக்கிறார். ஒருமுறை நடிகர் சங்க கடனை அடைப்பதற்காக விஜயகாந்த் மலேசியாவில் ஒரு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் பலரும் கலந்து கொள்ள இருந்தனர்.

ஆனால் சூப்பர் ஸ்டார் மட்டும் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் விஜயகாந்த் நடிகர் சங்க நிர்வாகிகள் அனைவரையும் அழைத்துக் கொண்டு ரஜினியை சந்திக்க அவருடைய வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு சென்ற அவர் நடு வீட்டில் தரையில் அப்படியே அமர்ந்து விட்டாராம். இதைப் பார்த்து உடன் சென்ற நிர்வாகிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

சூப்பர் ஸ்டார் கூட பதறி போய் எழுந்திருங்கள் விஜய், என்ன செய்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனாலும் பிடிவாதமாய் இருந்த கேப்டன் நீங்கள் மலேசியாவிற்கு வருகிறேன் என்று சொன்னால் தான் எழுந்திருப்பேன் என்று சிறு குழந்தை போல் அடம்பிடித்தபடி அமர்ந்திருக்கிறார். உடனே சூப்பர் ஸ்டார் எதைப்பற்றியும் யோசிக்காமல் நான் கண்டிப்பாக வருகிறேன், முதலில் எழுந்திருங்கள் என்று சமாதானப்படுத்தி இருக்கிறார்.

அதன் பிறகு அந்த கலை நிகழ்ச்சி சூப்பர்ஸ்டாரின் வருகையால் களை கட்டி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் மலேசியாவில் விஜயகாந்தை நெகிழ்ந்து போக செய்யும் அளவுக்கு ஒரு செயலையும் ரஜினி செய்திருக்கிறார். அதாவது மேடையில் பேசுவதற்காக அவசரமாக கிளம்பிய சூப்பர் ஸ்டார் விஜயகாந்தின் வேஷ்டியை அணிந்து கொண்டு தான் மேடை ஏறினாராம். அவ்வளவு பெரிய நடிகர் இவ்வளவு சிம்பிளாக நடந்து கொண்டதை பார்த்து விஜயகாந்த் ரொம்பவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். இந்த ஒரு சம்பவமே அவர்களுடைய நட்புக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →