14 வருடங்களுக்குப் பிறகு இணைந்த ஜோடி.. தளபதி 67 அப்டேட்டால் குதூகலமான சோசியல் மீடியா

இந்த வார ஆரம்பத்திலிருந்தே விஜய் ரசிகர்களுக்கு ஏகபோக கொண்டாட்டமாக தான் இருக்கிறது. கடந்த திங்கள் கிழமை அன்று ஆரம்பித்த இந்த மகிழ்ச்சி அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதாவது தளபதி 67 திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இரு தினங்களுக்கு முன்பு வெளியானது.

அதைத்தொடர்ந்து நேற்று இப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் ஒவ்வொரு பெயரும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், மேத்யூ தாமஸ் ஆகியோர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருந்தது.

இந்தப் பட்டியலில் இருக்கும் பெயர்கள் அனைத்தும் ஏற்கனவே அரசல் புரசலாக ரசிகர்களுக்கு தெரிந்த கதைதான். ஆனாலும் இதில் வெளியான மற்றொரு விஷயம் தான் ரசிகர்களை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. அதாவது இதுவரை டான்ஸ் மாஸ்டராக ஏராளமான ரசிகர்களை பெற்ற சாண்டி இதன் மூலம் நடிகராகவும் உருவெடுத்து இருக்கிறார்.

இதை எதிர்பார்க்காத ரசிகர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படி 8 நட்சத்திரங்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பு நிறுவனம் இன்றும் நிறைய அப்டேட்டுகள் வர இருப்பதையும் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் தற்போது விஜய்யின் நாயகி யார் என்ற சஸ்பென்சையும் அவர்கள் உடைத்துள்ளனர்.

trisha-thalapathy67
trisha-thalapathy67

இது அனைவருக்கும் தெரியும் என்றாலும் அதிகாரபூர்வமாக வெளிவந்திருக்கும் இந்த அறிவிப்பு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. அதன்படி 14 வருடங்களுக்கு பிறகு விஜய் உடன் நடிகை திரிஷா தளபதி 67 மூலம் இணைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் இந்த ஜோடி ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஜோடியாகும்.

அதனாலேயே இப்போது இவர்களை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இப்படத்தில் திரிஷா, விஜய் இருவருக்கும் இடையே வரும் ரொமான்ஸ் காட்சிகளும் ரசிகர்களை கவரும் வகையில் இருக்குமாம். அந்த வகையில் இப்போது தளபதி 67 அப்டேட்டால் சோசியல் மீடியாவே குதூகலமாகியுள்ளது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →