எதிரெதிர் துருவமாக கமலுடன் கலக்கிய நடிகர்.. 400 படம் நடிச்சாலும் உலகநாயகனுடன் மூன்றே படம்தான்

Actor Kamal: சினிமாவில் இருக்கும் நடிகர்களுள் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பவர் தான் உலக நாயகன் கமலஹாசன். அதிலும் கொள்கை சார்ந்த இவருடன் ஒட்டாத பல நடிகர்கள் இருக்கிறார்கள். அதனாலயே பிரபல நடிகர் ஒருவரும் கமலும் எலியும் பூனையுமாய் இருந்திருக்கின்றனர்.

என்னதான் இவர்கள் இருவரும் எதிரெதிர் துருவமாக இருந்தாலும் இருவரும் மூன்று படங்களில் சேர்ந்து நடித்து கலக்கி இருக்கின்றனர். ஒரு சிலருக்கு தான் பல திறமைகள் ஒருசேர அமையும், அப்படி தான் நடிகர் மணிவண்ணன் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும் 50 திரைப்படங்களை இயக்கியும் இருந்தார்.

மேலும் தன்னுடைய கோயம்புத்தூர் பாஷையில் நக்கலும் நையாண்டித்தனமாக அரசியலை பற்றி கிடைக்கும் இடங்களில் புட்டு புட்டு வைத்து விடுவார். அதுவும் கமலை எல்லா மேடைகளிலும் திட்டி தீர்ப்பார். கமல் கொள்கைகள் மணிவண்ணனுக்கு சுத்தமாகவே பிடிக்காது.

கமலுடன் மணிவண்ணன் சேர்ந்து நடித்த மூன்றே படம்

மணிவண்ணன் பெரியார் கொள்கைகள் மீது பற்று கொண்டவர். இதனாலேயே கமல், மணிவண்ணன் இடையே எப்பொழுதுமே கருத்து மோதல் ஏற்படும். ஆனாலும் மணிவண்ணன் நடித்த 400 படங்களில் மூன்றே படங்களில் மட்டும் கமலுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

கமல் நடிப்பில் வெளியான கலகலப்பான மூன்று திரைப்படங்களான பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம், அவ்வை சண்முகி போன்ற படங்களில் உலகநாயகனுடன் மணிவண்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த மூன்று படங்களில் கமல்- மணிவண்ணனின் காம்போ பக்காவாக ஒர்க் அவுட் ஆகி இருந்தது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →