இந்த வருடம் வெளிவராமல் போன 5 பெரிய ஹீரோக்களின் படங்கள்.. தரமான சம்பவத்தை செய்யப் போகும் ரோலக்ஸ்

5 Big Heroes Movies Not Released: முந்தைய காலங்களில் பண்டிகை தினங்களில் மட்டுமே புதுப்படங்கள் ரிலீஸ் ஆகிக்கொண்டு ரசிகர்களை ஆரவாரப்படுத்தியது. ஆனால் தற்போது வாரத்திற்கு அஞ்சு படம் என்று புது புது படங்கள் வெளி வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் இந்த வருடம் மிகவும் அதிக எதிர்பார்ப்பை வைத்து காத்துக் கொண்டிருந்தது பெரிய ஹீரோக்களின் படங்களை தான். ஆனால் அந்த படங்கள் இந்த வருடம் வெளிவராமல் அடுத்த வருஷத்தில் ரிலீஸ் ஆகப்போகிறது. அந்த படங்களை பற்றி பார்க்கலாம்.

கமல் – இந்தியன் 2: ஊழலையும், மோசடியில் நடக்கும் தவறுகளையும் தண்டிக்கும் விதமாக இந்தியன் தாத்தா அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். அதே மாதிரி இந்த காலத்திலும் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வாகவும், தவறு செய்தால் தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்பதை காட்டும் விதமாக இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியது. இப்படத்தை பிரம்மாண்டமாக சங்கர் இயக்கி இருக்கிறார். பல வருடங்களாக இழுவையில் இழுத்தடிக்கப்பட்ட இந்தியன் 2 இந்த வருடமாவது வெளிவரும் என்று ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் சில வேலைகள் இன்னும் முடிவடையாமல் இருப்பதால் அடுத்த வருடம் ஏப்ரல் மே வெளியிடலாம் என்று தள்ளி வைத்து விட்டார்கள்.

அஜித் – விடாமுயற்சி: இந்த ஆண்டு துவக்கத்தில் வெளிவந்த துணிவு படத்தை அடுத்து அஜித் மகிழ் திருமேனியுடன் கூட்டணி வைத்தார். இதற்கிடையில் விஜய் நடித்த லியோ படத்தை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு விடாமுயற்சி படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு சொன்னதிலிருந்து கடந்த 10 மாதங்களாக எந்த அப்டேட்டுகளும் இல்லாமல் இழுத்து அடித்தது. கடைசியாக போன மாதம் தான் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் எப்படியும் அடுத்த வருடத்திற்குள் ரிலீஸ் பண்ணி விட வேண்டும் என்று மும்மரமாக படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கிறது.

தனுஷ் – கேப்டன் மில்லர்: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் இந்த ஆண்டு எப்படியும் வெளியாகி விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. இதில் சிவராஜ் குமார், சுந்திப் கிஷன், பிரியங்கா அருள் முருகன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையிலும் இந்த வருடம் ரிலீஸ் ஆகாமல் அடுத்த வருடத்திற்கு திரையரங்குகளை அலங்கரிக்க வருகிறது.

சூர்யா – கங்குவா: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துக்கொண்டிருக்கும் பான் இந்தியா மூவி தான் கங்குவா. இப்படத்தில் சூர்யா வித்தியாசமான தோற்றத்துடன் கிட்டத்தட்ட பத்து மொழிகளில் 3d அனிமேஷனில் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் இதுவரை சூர்யா நடித்த படங்களை விட தோற்றத்திலும் கதையிலும் மிரட்டியதால் அடுத்த வருடத்திற்கு ரசிகர்களுக்கு தரமான சம்பவமாக இருக்கப் போகிறது.

அருண் விஜய் – வணங்கான்: பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வருகின்ற படம் தான் வணங்கான். பொதுவாக பாலா படங்கள் ஹீரோகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் கதைக்கு உயிரூட்டும் வகையில் எதார்த்தமான நடிப்பை கொண்டு வருவதில் இவரை மிஞ்சுவதற்கு ஆளே கிடையாது. அப்படிப்பட்ட இவருடைய இயக்கத்தில் அருண் விஜய் எந்த மாதிரியான நடிப்பை கொடுப்பார் என்று ரசிகர்கள் பார்ப்பதற்கு ரொம்பவே ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் பாலாவின் படம் எப்போதுமே வெற்றி படமாக தான் அமையும். அந்த வகையில் அடுத்த வருடம் கண்டிப்பாக பாலா மற்றும் அருண் விஜய்க்கு ஒரு திருப்புமுனையாக இந்த படம் பேசப்படும்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →