விஜய்க்கு சிம்பு கொடுத்த மாஸ் என்ட்ரி.. அதே சந்தோஷத்தை வாரிசு நடிகருக்கு திருப்பிக் கொடுத்த எஸ்டிஆர்

கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் தீ தளபதி பாடலை சிம்பு பாடி மாஸ் என்ட்ரி கொடுத்தார். அதே சந்தோஷத்தை பிரபல வாரிசு நடிகருக்கும் திரும்பி கொடுக்க வேண்டும் என எஸ்டிஆர் பத்து தல படத்தில் பெரிய பிளான் போட்டு ஒரு செயலை செய்துள்ளார். இயக்குனர் நார்தன் மற்றும் இயக்குனர் கிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு கௌதம் கார்த்திக் நடிக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம் தான் பத்து தல.

படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் சிம்புவின் பத்து தல திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. மாநாடு படத்திற்கு முன் சிம்புவின் சினிமா கெரியர் கேள்விக்குறியாக இருந்தது. அந்த சமயத்தில் முதலில் இந்த படத்தில் கௌதம் கார்த்திக் தான் ஹீரோவாக புக் செய்யப்பட்டார். அதன் பிறகு கெஸ்ட் ரோல் பண்ண வேண்டிய சிம்பு இதில் மெயின் ஹீரோவாகிவிட்டார்.

இப்பொழுது கௌதம் கார்த்திக்காக நிறைய விஷயங்களில் மெனக்கிட்டு வருகிறார். அப்பா கார்த்திக் பெரிய நடிகர். பையனுக்கு சரியாக சினிமாவில் நேரம் அமையவில்லை என அவரை வளர்க்க பெரிதும் பாடுபடுகிறார். அவருக்காகவே இந்த படத்தில் ஒரு ப்ரோமோஷன் சாங் வைக்கும் படி கூறி இருக்கிறார்.

இதேபோல் இதற்கு முன்னர் நடிகர் சந்தானமும் வளர்வதற்கும் நிறைய பேரிடம் சிபாரிசு செய்துள்ளார். அதேபோல கௌதம் கார்த்திக் சினிமாவில் டாப் ஹீரோவாக வருவதற்கு அத்தனை வேலைகளையும் சிம்பு பின்புலத்திலிருந்து பார்க்க நினைக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் சிம்புவுக்கு அந்த நிலை ஏற்பட்டது.

அதுமட்டுமில்லை இவ்வளவு நல்ல உள்ளம் கொண்ட சிம்பு எதற்காக பத்து தல படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க இருந்த வாய்ப்பை அபகரித்தார் என்ற கேள்வி எழுகிறது. அவருக்கே மாநாடு படத்திற்கு பிறகு தான் பத்து தல படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த லட்சணத்தில் இவர் பத்து தல படத்தில் கௌதம் கார்த்திக்குக்கு ப்ரோமோஷன் சாங் வைத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

இருப்பினும் கௌதம் கார்த்தியின் வாய்ப்பை தான் சிம்பு பயன்படுத்தி இருக்கிறார் என்ற பேச்சு வெளியில் வரக்கூடாது என்பதற்காக பத்து தல படத்தில் கௌதம் கார்த்திக்குக்கு ப்ரோமோஷன் சாங்கை வைத்துள்ளார். இதெல்லாம் ஊருக்கே தெரிஞ்ச விஷயம் தான். இதற்கு அப்புறமும் பூசி மொழுக வேண்டாம் என்று சிம்புவை வசை பாடுகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →