திரிஷாவை இழுத்து சாக்கடையில் தள்ளிய அரசியல்வாதி.. மன்சூருக்கு மட்டும் Action இப்ப நோ Reaction

Trisha: இன்று காலையில் இருந்தே சோசியல் மீடியா கடும் பரபரப்பாக மாறி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் திரிஷாவை பற்றி பிரபல அரசியல்வாதி கூறியிருக்கும் விஷயம் தான். அதிர்வை ஏற்படுத்தி இருக்கும் இந்த விவகாரத்தில் திரிஷா அமைதி காப்பது பல சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

அதாவது கூவத்தூரில் எம்எல்ஏக்களின் ஆசையை நிறைவேற்ற கருணாஸ் பல நடிகைகளை அழைத்து வந்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ வி ராஜு இந்த ரகசியத்தை வெளியிட்டது மட்டுமல்லாமல் திரிஷாவுக்கு 25 லட்சம் கொடுத்த விஷயத்தையும் கூறியுள்ளார்.

இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது திரிஷாவுக்கு ஆதரவாக பல பேர் இறங்கி உள்ளனர். இதில் இயக்குனர் சேரன் எந்த ஆதாரமும் இல்லாமல் பொதுவெளியில் இப்படிப்பட்ட அவதூறு செய்திகள் பரப்புவதை கண்டிக்கிறேன் என தன் சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுபோல் திரிஷாவுக்கு ஆதரவாக பல பதிவுகள் வந்தாலும் அவருக்கு எதிராகவும் கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் சில மாதங்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் தன்னை அவதூறாக பேசி விட்டதாக திரிஷா பதிவிட்டு பெரும் பிரச்சனைக்கு அஸ்திவாரம் போட்டார்.

அந்த விவகாரம் சர்ச்சையாக மாறிய நிலையில் மன்சூர் அலிகானுக்கு எதிராக திரையுலகினர் அனைவரும் திரண்டு வந்தனர். ஆனால் தற்போது திரிஷா பற்றி இப்படி ஒரு விஷயம் வெளிவந்திருக்கிறது. ஆனால் இப்போது மட்டும் அவர் வாயை மூடிக் கொண்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை.

இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கும் வலைப்பேச்சு பிரபலம் சக்திவேல், ஆள் பலம், பணபலம், அதிகார பலம், அரசியல் பலம் இல்லாத ஆள்னா உடனே Action. இது எல்லாம் இருக்கிற அரசியல்வாதினா No Reaction. என் திரிஷா சைலன்டாக இருக்கிறீர்கள்? என பதிவிட்டுள்ளார். இப்படி ஒரே வீடியோவில் திரிஷா மானத்தை வாங்கிவிட்டார் அந்த அரசியல் பிரபலம்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →