ஹீரோக்களை மிஞ்சும் மாகாபாவின் சொத்து மதிப்பு.. வாயை பிளந்து பார்க்கும் கோலிவுட்

விஜய் டிவியில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர் மாகாபா ஆனந்த். ஆரம்பத்தில் இவர் ரேடியோ மிர்ச்சியில் வேலை பார்த்து வந்துள்ளார். இதை தொடர்ந்து இவருக்கு விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆரம்பத்தில் பாவனா மற்றும் மாகாபா தொகுத்து வழங்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. ஒரு நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் எப்படி எடுத்துச் செல்வது என்பதில் கைதேர்ந்தவர் மாகாபா. மேலும், சிவகார்த்திகேயனை மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமாக்கிய நிகழ்ச்சி அது இது எது.

மேலும், சிவகார்த்திகேயன் வெள்ளி திரைகள் சென்ற பிறகு இந்நிகழ்ச்சியை மாகாபா தொகுத்து வழங்க ஆரம்பித்தார். மேலும் தொடர்ந்து பல்வேறு ரியாலிட்டி ஷோக்களை தற்போது வரை தொகுத்து வழங்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு கால்பதித்தார்.

வானவராயன் வல்லவராயன், மீசைய முறுக்கு, நவரச திலகம் போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் வெள்ளித்திரையில் பெரிய அளவு வரவேற்பு கிடைக்காததால் மீண்டும் சின்னத்திரையில் கலக்கி வருகிறார்.மாகாபா ஆங்கிலோ இந்தியன் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளார். மாகாபா தன் குடும்பத்துடன் அடிக்கடி வெளிநாடு சுற்றுலா சென்று வருவார். தற்போது யூடியூப் சேனல் ஒன்று தொடங்கி அதில் பல வீடியோக்கள் போட்ட சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் தற்போது மாகாபாவின் சொத்து மதிப்பு வெளியாகி இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.

அதாவது மாகாபா ஆனந்தின் சொத்து மதிப்பு 4-5 மில்லியன் USD என கூறப்படுகிறது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. சின்னத்திரையில் இருந்து இவ்வளவு சம்பாதிக்க முடியுமா என்று இவரின் சொத்து மதிப்பை அறிந்த கோலிவுட்டே வாய்பிளந்து பார்க்கின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →