நாலா பக்கமும் கமலுக்கு விழும் அடி.. காப்பாத்தி விடுவாரா உதயநிதி

சிம்பு-கமலஹாசன்-மணிரத்தினம் காம்போவில் வெளிவந்த தக் லைஃப் விமர்சனங்களால் அடி விழுந்து, நாளுக்கு நாள் வசூல் குறைந்து கொண்டே வருகிறது. ஜூன் 5ம் தேதி 400-களுக்கும் மேலான தியேட்டர்களில் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் 10 கோடி வசூல் செய்தது.

அடுத்த வாரங்களில் தியேட்டர்களில் காட்சிகள் குறைக்கப்பட்டு 213 தியேட்டர்களில் மட்டும் வெளியிட்டு ஒரு கோடி வசூலை தாண்டுவதற்கு தட்டு தடுமாறி வருகிறது. கிட்டத்தட்ட 50 சதவீதம் வசூல் கீழே விழுந்து விட்டதால் தியேட்டர் உரிமையாளர்கள் டிஸ்ட்ரிபியூட்டர் ரெட் ஜெயன்ட் மற்றும் தயாரிப்பாளர் கமலஹாசன்-மணிரத்தினிடம் நஷ்ட ஈடு கேட்டுள்ளனர்.

ஏற்கனவே Netflix OTT தளத்தில் எவ்வளவு சீக்கிரம் வெளியிட முடியுமோ படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் 130 கோடிக்கு பிசினஸ் செய்யப்பட்ட தக் லைஃப் தற்போது 30 கோடி குறைத்துக் கொள்ளுங்கள் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனால் கமலுக்கு நாலா பக்கமும் கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. தக் லைஃப் படத்தை ரெட் ஜெயன்ட் உதயநிதி டிஸ்ட்ரிபியூட் செய்தது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை உதயநிதி தரப்பிலிருந்து ஈடு கொடுக்க முடியுமா அல்லது கமல் கைக்காசை போடணுமா என்பது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு வெளிவந்த கமலஹாசனின் விக்ரம் ஒரே வாரத்தில் 168 கோடி தொட்டது. ஆனால் தக் லைஃப் படம் 45 கோடி தான் முதல் வாரத்தில் வசூல் செய்துள்ளது. இதனால் பிசினஸ் ரீதியாக கமலின் மார்க்கெட் பெருத்த அடி வாங்கி உள்ளது.

திமுகவில் இணைந்த பின் உதயநிதிக்கு நெருக்கமாகியுள்ளார் கமலஹாசன். இதனால் சுலபமாக அரசியல் செல்வாக்குடன் இந்த பிரச்சனையை தீர்த்து விடுவார்கள் என்று கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றது. இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →