ரிலீசுக்கு முன்பே 20 நஷ்டம்.. தக் லைஃப்க்கு வந்த தலைவலி

Kamal : மணிரத்னத்தின் தக் லைஃப் படம் வருகின்ற ஜூன் 5 ஆம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் மற்றும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் ஆகிய நிறுவனங்கள் இந்த தயாரித்துள்ளது.

கமல் இந்த படத்தின் ப்ரமோஷனில் படு பயங்கரமாக ஈடுபட்டு வருகிறார். அவ்வாறு சமீபத்தில் சிவராஜ் குமாரை பற்றி ப்ரோமோஷனில் பேசினார். அதாவது கர்நாடகாவில் இருந்த போது சிவராஜ் குடும்பம் தான் தன்னுடைய குடும்பமாக இருந்தது.

மேலும் தமிழே, உயிரே என்று தான் நான் முதலில் ஆரம்பிப்பேன். ஏனென்றால் கன்னடம் தமிழ் மொழியிலிருந்து பிறந்தது தான். இதை அவரும் ஒற்றுக் கொள்வார் என்று பேசி இருந்தார். இதற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தக் லைஃப் படத்திற்கு ரிலீஸுக்கு முன்பே 20 கோடி நஷ்டம்

அதோடு கமல் மன்னிப்பு கேட்டால் தான் கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகும் என்றும் கூறினர். ஆனால் நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை, என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக கமல் கூறிவிட்டார். என்னுடைய தரப்பிலிருந்து பார்த்தால் இது சரியாக இருக்கும்.

உங்களுடைய தரப்பில் இருந்து பார்த்தால் அது தவறாக தெரியும் என்றும் கூறியிருந்தார். இப்போது கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியிட கூடாது என முடிவு செய்திருக்கின்றனர். இதனால் படத்தின் ரிலீசுக்கு முன்பே 20 கோடி நஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

ஆனாலும் கமல் பரவாயில்லை என்று சொல்லிவிட்டாராம். தன்னுடைய கூற்றை மாற்றிக் கொள்ள முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறார். கமல் இந்த படத்தை தயாரிப்பதால் அதில் ஏற்கும் நஷ்டத்தை தான் ஏற்றுக் கொள்வதாக கூறிவிட்டாராம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →