Dhanush & Simbu : ரொம்ப வருஷம் கழிச்சு தனுசுடன் மோதிய சிம்பு.. இணையத்தில் தெறிக்கவிடும் தக் லைப், ராயன் போஸ்டர்கள்

சினிமாவில் விஜய், அஜித்துக்கு அடுத்தபடியாக போட்டி நடிகர்களாக பார்க்கப்படுவது தனுஷ் மற்றும் சிம்பு தான். இவர்கள் இருவருமே இப்போது பயங்கரமாக சினிமாவில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கமல் தயாரிப்பில் சிம்பு ஒரு படத்தில் நடித்து வரும் நிலையில் கமலுடன் தக் லைப் படத்திலும் நடித்து வருகிறார்.

இன்றைய தினம் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியிருந்தது. சிம்பு உடம்பை குறைத்து மெலிந்து போய் பழைய படி இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதோடு 8 ஆம் தேதி தக் லைப் படத்தின் முக்கிய வீடியோ ஒன்று வெளியாக இருக்கிறது.

சிம்புவின் தக் லைப் போஸ்டர்

thug-life
thug-life

அதேபோல் தனுஷும் இப்போது நிறைய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அந்த வகையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி, நடித்து வரும் படம் தான் ராயன். பக்கா ஆக்சன் படமாக இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தைப் பற்றிய போஸ்டரும் வெளியாகி இருக்கிறது

அதாவது இந்த படம் ஜூன் மாதம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் வருகின்ற ஒன்பதாம் தேதி ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாக உள்ளது. ஆகையால் பல வருடங்கள் கழித்து தனுஷ் மற்றும் சிம்பு படங்களின் வீடியோக்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாக இருக்கிறது.

தனுஷின் ராயன் பட போஸ்டர்

rayan
rayan

இதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும் மணிரத்னம் இப்போது தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பை டெல்லியில் நடத்தி வருகிறார். கமல், சிம்பு ஆகியோர் இப்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் தொடர்ந்து சறுக்களை சந்தித்து வரும் தனுஷ் ராயன் படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மே மாதம் தனுஷ் மற்றும் சிம்பு ரசிகர்களுக்கு சம ட்ரீட் ஆக அமைய இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →