ஹிந்தில எவ்ளோ படம் ஓடல? Thuglife படத்தை சிதைக்க வரம்பு மீறும் Netflix

Thuglife படம் விமர்சனங்கள் மூலமாகவே தடுக்கப்பட்டு மக்கள் மத்தியில் முழுசாக சென்றடையவில்லை. இதனால் பல தியேட்டர்களில் ஸ்கிரீன்கள் குறைக்கப்பட்டு வசூலில் மிகப்பெரிய அடி வாங்கி உள்ளது. என்னதான் அடி வாங்கினாலும் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு 150 கோடியும், சேட்டிலைட் ரைட்ஸ் விஜய் டிவிக்கு 60 கோடியும் பிசினஸ் ஆகியுள்ளது.

இப்படி இருக்கும் பட்சத்தில் வசூலை தாண்டி Thuglife பிசினஸ் செய்து விட்டது போட்ட காசை கமலஹாசன் எடுத்ததாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் Netflix 4 வாரத்தில் அதாவது 30 நாட்களில் ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு கமலஹாசனிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தளபதி விஜய்யின் லியோ மற்றும் கோட் படங்களுக்கான Ott வெளியீட்டை 8 வாரங்கள் நீட்டிக்க தயாரிப்பாளர் கேட்டபோது Netflix இல்லை என்று கூறியது, ஒப்பந்தத்தை மீற முடியாது என்று என்ற காரணத்தையும் அவர்கள் கூறினார்கள்.

இப்போது ThugLife படத்திற்கான விமர்சனங்களைப் பார்த்த பிறகு Netflix 8 வாரங்களை 4 வாரங்களாக மாற்றக் கேட்டது. நிறைய பெரிய பட்ஜெட் ஹிந்தி படங்கள் வசூலில் பேரழிவை ஏற்படுத்துகின்றன, ஆனால் அவை இன்னும் 8 வாரங்கள் வெளியீட்டை வழங்குகின்றன.

ஆனால் இப்படி தமிழ் படங்களுக்கு மட்டும் ஓரவஞ்சனை காட்டி சிதைக்க திட்டமிட்டுள்ளது Netflix. இது எந்த விதத்தில் நியாயம் என்பது போன்ற கேள்விகளை தற்போது கோலிவுட் வட்டாரமே கேட்டு வருகின்றனர்.

அவங்களுக்கு தேவைப்படும்போது விதிமுறைகளை மீறுவது எந்த விதத்தில் நியாயம் என்று கமலின் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இதனால் ThugLife படம் வெகுவிரைவில் ஓடிடி தளத்தில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →