டாப் கியர் போட்டு ஓடும் த்ரிஷா.. 2 படத்தால் லேடி சூப்பர் ஸ்டாரை ஓரம் கட்டிய மாமி

Trisha and Nayanthara: சினிமாவில் எத்தனை நடிகைகள் தொடர்ந்து வந்தாலும் எங்களை ஓவர் டேக் பண்ண முடியாது என்பதற்கு ஏற்ப த்ரிஷா மற்றும் நயன்தாரா போட்டி போட்டு நடித்து வருகிறார்கள். அந்த வகையில் இவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் சலிச்சவங்க இல்லை என்பதற்கு ஏற்ப மோதுகிறார்கள். நீயா நானா என்று மோதிய நிலையில் த்ரிஷாவுக்கு இடையில் மார்க்கெட் குறைந்துவிட்டது.

அந்த நேரத்தில் நயன்தாரா தொடர்ந்து பல படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்துடன் முன்னணியில் வந்து விட்டார். ஆனால் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்த பிறகு செகண்ட் இன்னிங்ஸ் ஆக மறுபடியும் த்ரிஷா தலைதூக்க ஆரம்பித்து விட்டார். அதற்கு ஏற்ற மாதிரி விஜய்யுடன் லியோ படத்திலும் நடித்து விட்ட இடத்தை திரும்ப பிடித்து விட்டார்.

அத்துடன் நயன்தாராக்கு தற்போது திருமணம் ஆகி விட்டதால் இந்த ஒரு விஷயமும் த்ரிஷாவுக்கு சாதகமாக போய்விட்டது. அதனால் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு திரிஷாவுக்கு தேடி வருகிறது. அந்த வகையில் இவருடைய மார்க்கெட் தற்போது டாப் கியரில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி படத்திலும், கமலின் தக் லைப் படத்திலும் நடித்து வருகிறார்.

அத்துடன் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் முன்னணி ஹீரோயினாக நடித்து வருகிறார். அதனால் நயன்தாராவின் மார்க்கெட் தற்போது டல்லாகி விட்டது. முக்கியமாக முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட் ஆகாமல் கிடைத்த வாய்ப்பை மிஸ் பண்ணவும் கூடாது என்பதற்காக ஏதோ நடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் தேடி வந்த வாய்ப்பில் கமிட்டாகி இருக்கிறார்.

ஆனால் திரிஷாவோ தமிழில் இரண்டு படங்களும், மலையாளத்தில் இரண்டு படங்களிலும் கமிட் ஆகி லேடி சூப்பர் ஸ்டாரை ஓரம் கெட்டும் அளவிற்கு மார்க்கெட்டை பிடித்து விட்டார். இந்த ஒரு காரணத்திற்காகவே தற்போது திரிஷா கல்யாணத்தைப் பற்றி யோசிப்பதாக இல்லை. ஏனென்றால் கல்யாணம் ஆகிவிட்டால் மார்க்கெட் குறைந்து விடும் என்பதற்காக தற்போது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நடித்து வருகிறார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →