விஜய் ஸ்டைலாக தம் அடிப்பார்.. பேட்டியில் எதார்த்தமாக கூறி மாட்டிக்கொண்ட பிரபலம்

விஜய் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் விஜய்யின் இருக்கும் ரசிகர்பட்டாளத்தால் படம் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து தளபதியின் 66-வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இப்படி தளபதி விஜயின் அடுத்தடுத்த படத்தை குறித்த அப்டேட்டை அறிந்துகொள்ள விரும்பும் ரசிகர்கள், அவரைக் குறித்து ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் சுவாரசியமான தகவலை வெளியிட்டிருக்கிறார். தமிழ் சினிமாவின் விஜய் மில்டன் ஒளிப்பதிவாளராக பல படங்கள் பணியாற்றியதுடன் இவர் ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ போன்ற ஒரு சிலர் படங்களை இயக்கி இயக்குனரானார்.

இவர் இயக்கத்தில் வெளியான கோலிசோடா 2 திரைப்படம் வசூலில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது மீண்டும் இயக்குனராக விஜய் ஆண்டனி வைத்து படத்தை இயக்கி வருகிறார். சமீபத்திய பேட்டியில் விஜய் மில்டன் தளபதி விஜயிடம் பணியாற்றியது பற்றி கூறினார்.

‘விஜய் உடைய படங்களில் அதிகம் நான் தான் பணியாற்றி உள்ளேன். அதனால் அவரும் நானும் நெருங்கிய நண்பர்களாக மாறினார். விஜய் அவர்களுக்கு பிரச்சினை என்றால் யாரிடம் சொல்ல மாட்டார். தனியாக சென்று ஸ்டைலாக தம் அடிப்பார். அதனால் கூடவே சென்று அவருடன் இருப்பேன்’ என விஜய் மில்டன் கூறினார்.

மேலும் சூட்டிங் ஸ்பாட்டில் அவரது நான்கு நண்பர்கள் வந்தால், அவர்களிடம் மட்டும் தான் பேசுவார். பக்கத்தில் ஹீரோயின் இருந்தால் கூட ஒரு வார்த்தை கூட பேச மாட்டார். அமைதியாகவே இருப்பார். இது பலரும் ஆச்சரியத்துடன் பார்க்க கூடிய விஷயமாக இருக்கும்.

இதுவே மற்ற நடிகர்களாக இருந்தால், கூட நடிக்கும் ஹீரோயின்களுடன் கடலை போடுவதை மட்டுமே வேலையாக வைத்திருப்பார்கள். ஆனால் தளபதி தன் நடிப்பில் மட்டும் தான் கவனம் செலுத்துவார்’ எனவும் விஜய் மில்டன் கூறினார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →