சன் டிவி சீரியல் ஹீரோவுடன் ஓவர் ரொமான்ஸில் புகுந்த வில்லி நடிகை.. விவாகரத்து ஆகி 3 வருடங்களுக்குள் ஏற்பட்ட காதல்

Villi actress romancing a Sun TV hero: தற்போது காதல் கல்யாணம் என்பது ரொம்பவே சர்வ சாதாரணமாக ஆகிவிடுகிறது. எந்த அளவிற்கு தங்களுக்கு தேவையான ஒரு துணையே தேடி கொள்கிறார்களோ, அதே மாதிரி சீக்கிரத்தில் விவாகரத்து கேட்டும் போய் சிலர் கோர்ட்டில் நிற்கிறார்கள். அதிலும் சின்னத்திரையில் நடித்து வருபவர்கள் நாடகத்தில் நடிக்கும் பொழுது அவர்களுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்கள்.

இந்த லிஸ்டில் ஆலியா மானசா – சஞ்சீவ், ஸ்ரேயா – சித்து, அன்வர் – சமீரா, ரேஷ்மா – மதன் போன்ற பல ஜோடிகள் இணைந்து சந்தோசமாக அவர்களுடைய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். அதே நேரத்தில் இன்னும் சில பேர் திருமணத்திற்கு பிறகு எங்களுக்குள் ஒத்துவரவில்லை என்று ரட்சிதா – தினேஷ், திவ்யா – அர்னவ், விஷ்ணுகாந்த் – சம்யுக்தா போன்ற சில ஜோடிகள் பிரிந்திருக்கிறார்கள்.

இதே மாதிரி சன் டிவி திருமகள் சீரியலில் நடித்த நிவேதிதா ஏற்கனவே மகராசி சீரியலில் நடித்த ஹீரோவான எஸ்.எஸ் ஆர்யனை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். ஆனால் அதன் பின்பு இவர்களுடைய கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து கொண்டார்கள். அந்த வகையில் விவாகரத்து ஆகி மூன்று வருடங்கள் ஆகியிருக்கிறது.

இந்நிலையில் நிவேதிதா மறுபடியும் சன் டிவி சீரியல் ஹீரோவை காதலித்து வருகிறார். திருமகள் சீரியலில் ஹீரோவாக நடித்த சுரேந்தரிடம் ஆரம்பத்தில் நட்பு ரீதியாக பழகி இருக்கிறார். பிறகு இவர்களுடைய பழக்கம் காதலா மாறி விட்டு தற்போது திருமண பந்தத்திற்குள் இணையப் போகிறார்கள். அதற்கு முன்னதாக இவர்கள் ரொமான்டிக்காக எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு நிவேதிதாவின்  கருத்துகளையும் பகிர்ந்திருக்கிறார்.

அதாவது எனக்கான காதலை நான் கண்டுபிடித்து விட்டேன். சிறப்பான ஒருவருடன் மகிழ்ச்சியாக என் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறேன். உங்களுடைய ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன் அதைப் போல் உங்களுடைய புரிதல் மற்றும் மரியாதை எங்களுக்கு தேவை. தயவு செய்து அநாகரீகமான கேள்விகளை கேட்பதை தவிர்க்கவும் என குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது இவர்களுடைய காதலுக்கும் கல்யாணத்துக்கும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஓவர் ரொமான்ஸில் புகுந்த வில்லி நடிகை

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →