Dhanush: காய்ச்ச மரம் கல்லடி படும் என்பது மாதிரி தான் நடிகர் தனுஷ் மீது பரப்பப்படும் நெகட்டிவ் விமர்சனங்களும். இதையெல்லாம் தாண்டி நடிகர் தனுஷ் தன்னுடைய 20 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் பல புது முகங்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி, உதவி செய்து இன்று சினிமாவில் அவர்களுக்கு என்ற ஒரு இடத்தை உருவாக்கி இருக்கிறார்.
சிவகார்த்திகேயன், அனிருத், விக்னேஷ் சிவன் போன்றவர்கள் எல்லாம் இந்த லிஸ்டில் இருந்தவர்கள் தான். தற்போது இந்த வரிசையில் தனுஷிடம் இன்னொரு வாரிசு நடிகர் தஞ்சம் அடைந்து இருக்கிறார்.
தனுஷிடம் சரண்டர் ஆன வாரிசு நடிகர்
90களின் காலகட்டத்தில் வித்தியாசமான கதைகளத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் பாண்டியராஜன். அவருடைய மகன்களில் பிரித்விராஜ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் பாண்டியராஜனுக்கு கிடைத்த வரவேற்பு பிரித்திவிராஜுக்கு கிடைக்கவில்லை.
பல வருடங்கள் கழித்து ப்ளூ ஸ்டார் படத்தில் இவர் நடித்திருந்தார். அப்போது சரியான இயக்குனர் கைகளில் பிரித்விராஜ் இருந்தால் கண்டிப்பாக அப்பாவை விட பெரிய அளவு பேர் வாங்குவார் என்று பேசப்பட்டது.
தற்போது பிரித்விராஜை தனுஷ் தன்னுடைய 54 ஆவது படத்தில் நடிக்க வைக்கிறார். தனுஷின் அசுரன் படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று உதவி இயக்குனர் வரை வளர்த்திருக்கிறார் கருணாசின் மகன் கென் கருணாஸ். அதே மாதிரி பாண்டியராஜின் மகன் பிரித்விராஜுக்கும் தனுஷ் மூலம் இனி சினிமாவில் விடிவு காலம் தான்.