விஜய்யின் மேனேஜரால் கட்டம் கட்டப்பட்ட பிரியங்கா மோகன்.. இப்படியெல்லாம் கூட அட்ஜெஸ்ட் மென்ட் பண்னனுமா?

Priyanka Mohan: டாக்டர், டான் படங்களின் மூலம் நம்பர் ஒன் இடத்திற்கு வந்த பிரியங்கா மோகன் தற்போது பெரிய அளவில் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறார். இதற்கு காரணம் நடிகர் விஜயின் மேனேஜர் ஜெகதீஷ் என்று சொன்னால் நம்ப முடிகிறதா.

விஜய் இடம் பல காலங்களாக மேனேஜராக பணியாற்றி வரும் ஜெகதீஷ் மற்றும் பிரியங்கா மோகன் இடையே என்ன பிரச்சனை என்று தெரிந்தால் இதன் காரணம் புரிந்து விடும். தயாரிப்புத் துறையில் கால் பதித்திருக்கும் ஜெகதீஷ் ரூட் என்ற பி ஆர் நிறுவனத்தையும் ஆரம்பித்திருக்கிறார்.

கட்டம் கட்டப்பட்ட பிரியங்கா மோகன்

இந்த நிறுவனத்துடன் பல டாப் நடிகர்கள் மற்றும் நடிகைகள் கைகோர்த்து தான் சமூக வலைதளங்களில் பெரிய பிம்பங்களாக காட்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். இரண்டே படத்தில் நயன்தாரா இடத்தை பிடிக்க வந்து விட்டார் என சமூக வலைத்தளத்தில் பிரியங்கா மோகன் கொண்டாடப்பட்டதிற்கும் இந்த நிறுவனம் தான் காரணம்.

புகழின் உச்சியில் மிதந்து கொண்டிருந்த பிரியங்கா மோகன் ரூட் நிறுவனத்திலிருந்து விலகி வேறொரு பி ஆர் நிறுவனத்திடம் கைகோர்த்து இருக்கிறார். இதனால் ரூட் நிறுவனம் வம்படியாக பிரியங்கா மோகனை சமூக வலைத்தளங்களில் கேலி பொம்மையாக ஆக்கியிருக்கிறதாம்.

கடந்த சில வருடங்களாக சமூக வலைத்தளத்தில் பிரியங்கா மோகன் பற்றி வெளியே வரும் அத்தனை செய்திகளும் நெகட்டிவ் தான். கோல்டன் ஸ்பேரோ படத்தில் இவர் நடனம் ஆடியதே படத்தை மீறி இவர் மீது நெகட்டிவ் விமர்சனம் வந்திருப்பது இதற்கு சாட்சி.

ஒரு பி ஆர் நிறுவனத்தில் இருந்து விலகியதன் காரணமாக தனுஷ் மற்றும் சூர்யா போன்ற டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டுக் கொண்டிருந்த பிரியங்கா மோகன் தற்போது கவினுக்கு ஜோடியாக நடிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.