விஜய் சேதுபதி நடித்த” ACE” படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் ருக்மணி வசந்த். மிகவும் க்யூட்டான நடிகையாக தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பொழுது தமிழில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார்.
தற்சமயம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மதராசி படத்தில் இவர் தான் ஹீரோயின். ஒரு பக்கம் அவருடன் டூயட் பாடினாலும் மற்றொரு படத்தில் வில்லியாக நடித்து வருகிறார். ஒரே சமயத்தில் இரண்டு பக்கம் வேறு வேறு முகம் காட்டுகிறாராம்.
மதராசி படத்தில் க்யூட்டாக வலம் வரும் இவர் மறுபக்கம் காந்தாரா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். பெயருக்கு ஏற்றார் போல் காந்தாரா முதல் பாகம் மிரட்டியது. இப்பொழுது இதன் இரண்டாம் பாகத்தை ரிஷப் செட்டி இயக்கி முடித்துள்ளார்.
வருகிற அக்டோபர் மாதம் இந்த படம் வெளிவர இருக்கிறது. ஒருவேளை தீபாவளிக்கு மற்ற படங்கள் வழி விட்டால் இந்த படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தை காட்டிலும் பல மடங்கு டெரராக இதை இயக்கி நடித்துள்ளார் ரிஷப் செட்டி.
இந்த படத்தில் ருக்மணி வசந்தத்திற்கு நெகட்டிவ் ரோல் என்று கூறுகிறார்கள். மதராசிபடத்திற்கு நேர் மாறாக அப்படியே வேறு ஒரு முகம் காந்தாராவிற்கு காட்ட வேண்டுமாம். ரிஷப் செட்டி உடன் நேருக்கு நேர் மோதும் வில்லி கதாபாத்திரம் ஏற்றி நடித்திருக்கிறார்.
கடந்த ஆறு மாதங்களாக ஒரே நேரத்தில் இரண்டு படத்திலும் நடித்து வருகிறார் ருக்மணி வசந்த். ஒரு இடத்தில் டூயட் பாட வேண்டும் மறு இடத்தில் சண்டைக்காட்சிகளுக்கு தயாராக வேண்டும். இப்படி முகபாவனையை மாற்றி மாற்றி இரு படங்களுக்கும் தயாராகி பட்டையை கிளப்பி உள்ளாராம்.