செப்டம்பர் மாதம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு மாதம் தான். திரையரங்குகளில் தொடர்ந்து படங்கள் வெளியாவதால், ரசிகர்களுக்கு பல்வேறு வகை படங்களை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வகையில் செப்டம்பர் 5, 2025 அன்று தியேட்டரில் வெளிவரும் 4 படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
மதராஸி
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரும் இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நகர வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு, ஆக்ஷன், எமோஷனல் கலந்து உருவான படம் என்பதால், குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய கமர்ஷியல் படம்.
காந்தி கண்ணாடி
சமூக கருத்துக்களை பேசும் ஒரு வேறுபட்ட கதை மந்திரம் கொண்ட படம். ட்ரெய்லரே படம் குறித்து ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக யுவா இயக்கத்தில் சமூக அரசியல் பார்வையோடு வந்திருப்பதால், விமர்சகர்களின் கவனத்தையும் ஈர்க்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காதி
கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா மற்றும் விக்ரம் பிரபு இயக்கத்தில் செப்டம்பர் 5 ல் வெளிவரும் காதி மர்மம், திரில்லர், சஸ்பென்ஸ் கலந்து உருவாக்கப்பட்ட படம். டார்க் பின்புலத்தில் நகரும் கதைக்களம், கதாபாத்திரங்களின் உளவியல் நிலையை சுவாரஸ்யமாக வெளிப்படுத்தும் என கூறப்படுகிறது. க்ரைம், த்ரில்லர் ரசிகர்களுக்கு இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும்.
Bad Girl
வெற்றிமாறன் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வர்ஷா இயக்கத்தில் பெண்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் Bad Girl சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அதில் இருக்கும் உண்மை, காமெடி மற்றும் எமோஷனல் கலந்த கதையாக இருக்கும். படத்தின் பெயரே பலரிடையே ஆர்வத்தை கிளப்பி வருகிறது.
செப்டம்பர் 5ஆம் தேதி நான்கு படங்கள் ஒரே நாளில் வெளியாவதால், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு சிறிய பண்டிகை போல இருக்கும். திரையரங்குகளில் பாக்ஸ் ஆபிஸ் மோதல் நடைபெறவிருக்கிறது ரசிகர்கள் எந்த படத்திற்கு அதிக ஆதரவு அளிக்கிறார்கள், எந்தப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.