போகி கொண்டாடிய ஷங்கர் அண்ட் மணிரத்தினம்.. சரி வராதுன்னு பாதையை மாற்றும் கர்ணல் விக்ரம்

ஒரு காலத்தில் மொத்த தமிழ் சினிமாவும் ஷங்கர் மற்றும் மணிரத்தினத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வந்தது. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய இயக்குனர்களின் பங்கு முக்கியமானது என ஆர்ப்பரித்து மார்தட்டி வந்தனர்.

இன்று இவர்கள் இருவரும் 50+ இயக்குனர்களாக மாறிவிட்டனர். இதனாலையோ என்னமோ இப்போது உள்ள ட்ரெண்டுக்கு ஏற்றார் போல் இவர்கள் படம் பண்ணுவதில்லை. குறிப்பாக இந்தியன் 2 படம் கமல் மற்றும் ஷங்கர் இருவரையும் மன அழுத்தத்திற்கு கொண்டு போனது.

ஒரு காலத்தில் மிகப்பெரிய வெள்ளிவிழா கொடுத்த இயக்குனர்கள் எல்லோரும் இந்த காலத்திற்கு ஏற்ப டிராவல் செய்வதில்லை. இதனாலையே பல ஹீரோக்கள் இளம் இயக்குனர்களை தேடி செல்கின்றனர். குறிப்பாக ரஜினிகாந்த் இளம் கூட்டணியால் கவரப்பட்டு அவர்களுடனே டிராவல் செய்து வருகிறார்.

கமல் இதற்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து மரண மாஸ் கொடுத்த படம் விக்ரம். சுமார் 600 கோடிகள் வசூல் செய்து பெரும் லாபத்தை கொடுத்தது. ஆனால் அதன்பின் இந்தியன் 2 மற்றும் தக்லைஃப் இரண்டும் கேள்விக்குறியாகி உள்ளது.

ஷங்கர், மணிரத்தினம் போன்றவர்களின் எண்ணம் பெரும்பாலும் தயாரிப்பாளருக்கு படம் நஷ்டத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. எப்படியாவது இந்த படத்தை ஓட வைக்க வேண்டும். அதனால் சில பழமையான விஷயங்களை அவர்கள் கை விடுவதில்லை. இதனால் பழையபடி கமல் லோகேஷ் கனகராஜ் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளார். கூடிய விரைவில் விக்ரம் 3 கூட்டணியை திட்டம் போட்டு வருகிறார்.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →