மாட்டிக்கிட்டியே பங்கு.. ஒரே பதிவில் தனுஷ்-மிருணாள் காதலை பங்கம் பண்ணிய சுசித்ரா!

Dhanush: ஒலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது என்று சொல்வார்கள். அப்படி தற்போதைக்கு நல்ல கன்டன்ட்டாக அமைந்திருப்பது தனுஷ் நடிகை மிருணாள் தாகூரை காதலிக்கிறார் என்பதுதான்.

தனுஷ் என்றதும் இந்த விஷயத்திற்கு சுசித்ரா என்ன சொல்லப் போகிறார் என எல்லோருமே எதிர்பார்த்தார்கள். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சுசித்ரா நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

தனுஷ், உங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் நீங்கள் மும்பை சினிமாவை சேர்ந்த பெண்ணை காதலிப்பது பச்சை துரோகம். உண்மையை சொல்லப்போனால் நீங்கள் தான் அந்தப் பெண்ணிடம் மாட்டிக் கொண்டீர்கள்.

நிறைய பெண்கள் தங்கள் கணவர்களை ஏமாற்றிவிட்டு உங்களுடன் நட்பில் இருந்தார்கள். ஆனால் இந்தப் பெண், உங்களை அவ்வளவு எளிமையாக ஏமாற்றிவிட்டு செல்ல விட்டு விட மாட்டாள். நல்லவேளை ஐஸ்வர்யா உங்களிடம் இருந்து தப்பித்தது மட்டுமில்லாமல் உங்களை முழுதாக வெறுத்து விட்டார்.

இந்த பெண்ணை திருமணம் செய்தால் உங்கள் வீடு மற்றும் மகன்களின் நிலைமை தலைகீழாக மாறிவிடும். சுச்சி லீக்ஸ் என்ற விஷயத்தை நீங்கள் ஆரம்பிப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னால் இது எல்லாம் சரிதானா என்று யோசித்திருக்க வேண்டும்.

இதன் பின் விளைவு தான் இப்போது உங்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் விஷயம் என பதிவிட்டு இருக்கிறார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் உங்களுடைய பதிவை தான் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம், தனுஷ் மிருணாள் தாகூரை காதலிப்பது உண்மை தானா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.