சிவகார்த்திகேயன் படத்திற்கு குட் பாய்.. தளபதிக்காக வெறித்தனமாக தயார்படுத்திக் கொள்ளும் நெல்சன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் தொடங்கி இப்போது வெள்ளித்திரை வரை தனது திறமையால் வந்துள்ளார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் டாக்டர். இப்படத்தினை நெல்சன் இயக்கியுள்ளார் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க படத்தின் வில்லனாக வினய் நடித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக சில மாதங்கள் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஆனால் சமீபத்தில் ஊரடங்கு தளர்வுவுக்கு பின் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி தற்போது தான் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துள்ளனர்.

sivakarthikeyan
sivakarthikeyan

இந்த தகவலை சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக படத்தின் இயக்குனர் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் படத்தை முடித்து விட்டதை கேக்கை வெட்டி கொண்டாடி உள்ளனர். அந்த புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

டாக்டர் படப்பிடிப்பு முடிந்ததால் தளபதி 65 படத்தின் அடுத்த கட்ட வேலைகளில் வெறித்தனமாக இறங்கியுள்ளார் நெல்சன். இவரது சினிமா கேரியரில் இந்த படம் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.