சிவகார்த்திகேயனின் அசுர வளர்ச்சி.. மெரினா முதல் அமரன் வரை

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் அறிமுகமான நிலையில் வெள்ளி திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் மிமிக்கிரி செய்து தனது பயணத்தை தொடங்கிய அவர் அதன் பிறகு தொகுப்பாளராக மாறினார். அப்போதே சின்னத்திரையில் இவருக்கு ரசிகர்கள் அதிகம்.

இதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் மெரினா படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் முதல் 50 கோடி வசூல் செய்த படமாக அவரது மான்கராத்தே படம் அமைந்தது. அடுத்ததாக 25 கோடி வசூலை சிவகார்த்திகேயனின் ரெமோ படம் பெற்றது.

அதுவும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நடித்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது. அடுத்ததாக அசால்டாக 100 கோடி வசூலை அடித்தது சிவகார்த்திகேயனின் டாக்டர் படம். நெல்சன் இயக்கத்தில் உருவான டாக்டர் படம் சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

சினிமாவில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி

டாக்டர் வெற்றி பெற்ற நிலையில் அதே கையோடு அடுத்ததாக டான் படமும் மாபெரும் வெற்றியடைந்து 125 கோடி வசூலை எட்டியது. அதன் பிறகு சிறு சற்களை சந்தித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு அயலான் படம் ஓரளவு நடுநிலையான வெற்றியை கொடுத்திருந்தது.

இதைத்தொடர்ந்து தற்போது கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தியேட்டரில் வெளியாகி இருக்கிறது அமரன் படம். இதுவரை வெளியான படங்களில் சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததில்லை. அந்த அளவுக்கு அமரன் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் படம் வெளியாகி கிட்டத்தட்ட நான்கு நாட்களிலேயே 150 கோடி வசூலை அமரன் படம் எட்டி இருக்கிறது. ஆகையால் மிக விரைவில் இந்த படம் 500 கோடி வசூலை நெருங்க வாய்ப்பு இருக்கிறது. அதோடு அடுத்த சின்ன தளபதி சிவகார்த்திகேயன் என்ற பேச்சு இப்போது அடிபட்டு வருகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment