Suriya: போதும்பா சாமி ரீல் அந்து போச்சு என்று கவுண்டமணி சொல்லுவார். அப்படி ஒரு விஷயம் தான் இப்போது சூர்யா ஜோதிகா வாழ்க்கையில் நடந்திருக்கிறது. அவ்வளவு பெரிய நடிகர் சத்தமே இல்லாமல் கிழக்கு கடற்கரை சாலையில் வீடு கட்டி முடித்து விடலாம் என நினைத்தார்.
ஆனால் அஸ்திவாரம் போடுவதற்கு முன்பே செய்தி காற்றாய் பறக்க ஆரம்பித்துவிட்டது. சூர்யா இப்போது அந்த வீட்டை கட்டி முடித்து விட்டார். ஜோதிகாவிடம் ஒரு முறை பேட்டியில் எதற்காக இந்த மும்பை குடியேற்றம் என்று கேட்கப்பட்டது.
ரீல் எல்லாம் மொத்தமா அந்து போச்சு!
அதற்கு ஜோதிகா கிட்டத்தட்ட 20 வருடங்கள் சூர்யாவுடன் அவருடைய குடும்பத்தில் இருந்து விட்டேன். இப்போது என்னுடைய அப்பா அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, அதனால அவர்களுடன் இருக்க வந்திருக்கிறேன் என்று பூசி முழுகினார். அப்போவே தமிழ் சினிமா ரசிகர்கள் கணக்கு எங்கேயோ இடிக்குதே என்று சொன்னார்கள்.
இதற்கான விடையை இப்போது பிஸ்மி சொல்லி இருக்கிறார். ஜோதிகாவுக்கு சூர்யா குடும்பத்துடன் முரண்பாடு இருப்பது தான் உண்மை. இவர்கள் மும்பைக்கு குடியேறினாலும் நிறைய விஷயத்திற்காக சென்னைக்கு வர வேண்டியது இருக்கிறது.
குடும்பத்துடன் லட்சுமி இல்லத்தில் தங்கும் அளவுக்கு இவர்களுக்குள் நல்ல உறவு இல்லை. இதுவரை ஹோட்டலில் தங்கி வந்து கொண்டிருந்தார்கள். அப்படியே போனால் சரியாக இருக்காது என்று தான், கிழக்கு கடற்கரை சாலையில் வீடு கட்டப்பட்டு இருக்கிறது.
ஒரு பக்கம் சிவக்குமார் குடும்பம் ஜோதிகா நடிகை என்று தெரிந்த தான் திருமணம் செய்து கொண்டார்கள். அதனால் அவருடைய கேரியரில் அவர் அடுத்த கட்டத்தை நகர்வது தங்கள் குடும்பத்திற்கு சரி வராது என அவர்கள் நினைப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இன்னொரு பக்கம் சூர்யாவின் குடும்பம் இப்படி தான் என தெரிந்து தான் ஜோதிகா அவரை கரம்பிடித்தார், திடீரென அவரும் தன்னுடைய கோட்பாடுகளை மாற்றிக் கொள்வது என்பது எடுபடாது.