Sivakarthikeyan: அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் மதராஸி படத்தை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கியிருக்கிறார். செப்டம்பர் 5ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளியாக இருக்கிறது. அதற்கு முன் வழக்கம் போல் ரசிகர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் உற்சாகப்படுத்தும் விதமாக சலம்பலா பாடலை வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டிவிட்டது.
இதனை அடுத்து இப்படத்தின் ஆடியோ லான்ச் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. ஆனால் இதில் எதிர்பார்க்காத சில குழப்பங்கள் ஏற்பட்டது. ஆனால் அதை காதும் காதுமாக வைத்து அந்த பிரச்சினையை சிவகார்த்திகேயன் முடித்திருக்கிறார். அதாவது மதராஸி ஆடியோ லான்ச் கடந்த வாரம் சாய்ராம் காலேஜில் நடைபெற்றது.
ஆனால் இந்த காலேஜ்க்கு முன் முதலில் நேரு ஸ்டேடியத்தில் தான் வைப்பதற்கு பிளான் பண்ணி இருந்தார்கள். அந்த வகையில் இதற்கான டிக்கெட்டுகளை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் விற்பனை செய்தார்கள். அப்பொழுது எதிர்பார்த்த அளவிற்கு டிக்கெடுகள் விற்பனையாகாமல் வெறும் 103 டிக்கெட் தான் விற்பனையானது. ஆனால் நேரு ஸ்டேடியம் பத்தாயிரம் சீட்டு வரை இருப்பதற்கான வசதிகள் இருக்கிறது.
அப்படி இருக்கும் பொழுது கம்மியான டிக்கெட்டுகளை வைத்து நேரு ஸ்டேடியத்தில் வைத்தால் நன்றாக இருக்காது என்று முடிவு எடுத்த சிவகார்த்திகேயன் சட்டென்று நேரு ஸ்டேடியத்தில் இருந்து சாய்ராம் காலேஜுக்கு மாற்றி வைத்திருக்கிறார். ஏனென்றால் காலேஜில் வைத்தால் கல்லூரி மாணவர்கள் இருப்பார்கள் அதை வைத்து நாம் சமாளித்து விடலாம் என்று sk முடிவெடுத்ததாக மதராஸி டீம் கூறி இருக்கிறது.
அந்த வகையில் எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் சிறந்த நயத்துடன் செயல்பட்டதோடு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றார். அதனால் தான் குழந்தைகளை கூட்டிட்டு குடும்பத்துடன் பார்க்கும் படியாக இவருடன் படம் வெற்றி பெற்று வருகிறது. கடைசியாக நடித்த அமரன் ஹிட் படத்தின் லிஸ்ட்டோடு மதராஸி படமும் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.