சங்கர் வேள்பாரி கதையை தேர்ந்தெடுக்க இதான் காரணமா?

Velpari: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் வேள்பாரி படம் தான் தன்னுடைய கனவு படம் என்று சொன்னதிலிருந்து இந்த கதை மீது பலருக்கும் ஆர்வம் வந்திருக்கும். அந்த ஆர்வத்திற்கு தீனி போடுவதற்காக தான் இந்த செய்தி.

தமிழகத்தில் இதுவரை பசுவுக்காக நீதி சொன்ன மனு நீதி சோழன், இமயம் வரை சென்று கொடியேற்றிய சேரன் செங்குட்டுவன், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியன் என மூவேந்தர்களின் வரலாற்றை தான் தொடர்ந்து நமக்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இந்த மூவேந்தர்களின் வஞ்சகத்தால் வீழ்ந்த பாரி மன்னன் பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு நிறையவே இருக்கிறது. தமிழகத்தில் நீதி காத்த இந்த மூவேந்தர்களின் கூட்டு சூழ்ச்சியால் கர்ணனுக்கு அடுத்தபடியாக வாழ்ந்த பாரி மன்னன் உயிரிழந்தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா.

300 கிராமங்கள், 20,000 படைகளை வைத்து பரம்பு நாட்டை செல்வ செழிப்பாக ஆண்டு வந்தான் பாரி மன்னன். இவனுடைய செல்வ செழிப்பை கையாடல் செய்ய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் முதலில் தனித்தனியாக போரிடுகிறார்கள். இவர்களால் பாரி மன்னனை ஜெயிக்க முடியவில்லை.

எனவே மூன்று பேரும் ஒன்று சேர்ந்து பரம்பு நாட்டின் மீது போர் தொடுக்கிறார்கள். ஆனால் பாரி மன்னன் எறும்புகள் மற்றும் அட்டைப் பூச்சிகளை வைத்து மூவேந்தர்களை வென்று விடுகிறான். இவனுடைய வீரத்தின் முன் நம்மால் எதுவுமே செய்ய முடியாது என்பதை மூவேந்தர்கள் உணர்ந்து கொள்கிறார்கள்.

இறுதியாக மூவேந்தர்கள் புலவர் வேடமிட்டு பாரி மன்னனிடம் வந்து தங்களுடைய தமிழ் புலமைக்காக அவனுடைய நாட்டையும், உயிரையும் கேட்கிறார்கள். வந்திருப்பது இவர்கள்தான் என தெரிந்தும் பாரி மன்னன் இதற்கு சம்மதிக்கிறான்.

பாரி மன்னனின் மகள்களான அங்கவை மற்றும் சங்கவை முன்னிலையில், பாரி மன்னனின் கண் இமைகள் வெட்டப்படுகிறது கை கால்கள் வெட்டப்படுகிறது. ஒரு கட்டத்தில் தாகத்திற்கு தண்ணீர் கேட்கும் பாரி மன்னனின் தலையை வெட்டி கடலில் தூக்கி அடிக்கிறார்கள்.

இதை படமாக்கினால் பாரி மன்னனாக நடிக்கப் போவது யார் என்ற ஆர்வமே வாசகர்களுக்கு அதிகம் இருக்கும். இதை தாண்டி முக்கிய கேரக்டர்களான சேரன், சோழன், பாண்டியனுக்கும் பெரிய ஹீரோக்களை தான் நடிக்க வைக்க வேண்டும். எனவே கண்டிப்பாக இந்த படம் மல்டி ஸ்டார் படமாக தான் உருவாகும். இதனால் தான் ஷங்கர் இந்த கதையை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.