முத்த மழை வீடியோ பாடல் எப்படி இருக்கு.? எல்லாம் ஓகே ஆனா இது செட் ஆகலையே

Thug Life: மணிரத்னம், கமல் கூட்டணியின் தக் லைஃப் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த அளவுக்கு படம் ட்ரோல் செய்யப்படும் என அவர்கள் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

அந்த அளவுக்கு படத்தை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி விட்டனர். அது வசூலுக்கும் பாதிப்பாக அமைந்தது. அதை அடுத்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்த போதும் கூட பணம் கொடுத்து இந்த வேலையை செய்திருக்கிறார்கள் என ஒரு பஞ்சாயத்து கிளம்பியது.

இப்போதுதான் அந்த பரபரப்பு கொஞ்சம் அடங்கி இருக்கிறது. ஆனால் மீண்டும் அவர்களே ஒரு கன்டென்ட் கொடுத்திருக்கிறார்கள். அதாவது இசை வெளியீட்டு விழாவில் சின்மயி குரலில் முத்த மழை பாடல் அனைவரையும் மயக்கியது.

முத்த மழை வீடியோ பாடல் எப்படி இருக்கு.?

ஆனால் படத்தில் இப்பாடலை பாடியது பாடகி தீ. இருந்தாலும் பாடல் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள படத்தை பார்த்தவர்கள் ஏராளம். ஆனால் அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் படத்தில் அந்த பாடல் இடம்பெறவில்லை.

தற்போது அந்த பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி உள்ளது. அதில் த்ரிஷா மேடையில் பாடுவது போன்று காட்சிகள் இருக்கிறது. ஆனால் தீ குரல் அவருக்கு கொஞ்சம் கூட பொருந்தவில்லை.

இரண்டும் தனித்தனியாக நிற்பது போன்ற உணர்வு பார்ப்பவர்களுக்கு இருக்கிறது. அதே போல் சிலர் ரொம்ப காமெடியா இருக்கு. இதை நிச்சயம் எதிர்பார்க்கல என்றும் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

மேலும் நல்ல வேளை பாட்டு படத்துல வரல என்ற கருத்தும் பரவி வருகிறது. இப்படியாக வெளியான சில நிமிடங்களில் மீண்டும் விவாதத்திற்கு ஆளாகி இருக்கிறது முத்த மழை.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →