உலகநாயகன் கமலுக்கு போட்டி கொடுத்த உலகநாயகி.. எல்லா ஹீரோக்களையும் வியக்க வைத்த நடிகை

சினிமாவில் 40 வருடங்களாக முன்னணி நடிகராக வலம் வரும் கமலஹாசன் தமிழில் மட்டுமல்ல அனைத்து மொழிகளிலும் நடித்து அசத்தியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பெங்காலி, கன்னடம் என அனைத்திலும் நடித்த உலக நாயகன் என பெயர் பெற்றார்.

இவரைப் போன்றே 70களில் நடிப்பிற்கு இலக்கணம் ஆக இருந்து, ‘உலகநாயகி’ என்ற பெயரையும் பெற்றிருக்கிறார் நடிகை ஒருவர். இவருடைய நடிப்பு மிகவும் நேர்த்தியாகவும் பிசிறு தட்டாமல் இருந்ததால் முன்னணி கதாநாயகர்களும் இவரை போட்டியாக நினைப்பார்கள்.

இவரும் கமல் போன்றே அனைத்து மொழிகளிலும் நடித்து அசத்தியவர். இவரை நடிகர் திலகம் என்றும் ரசிகர்களும் செல்லமாக அழைப்பார்களாம். நடிகர் சாவித்திரி நடிப்பது எல்லாம் பெரிய பெரிய நடிகர்களுடன் தான்.

இவர் தமிழில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், எஸ்எஸ்ஆர் போன்ற பிரபலங்களுக்கு ஜோடி சேர்ந்து ஹிட் கொடுத்தார். மேலும் தெலுங்கில் டாப் ஹீரோக்களான என் டி ராமாராவ், நாகேஸ்வர ராவ் போன்றவர்களுடன் ஜோடி சேர்ந்து நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

தெலுங்கிலும் இவர் டாப் கதாநாயகியாக திகழ்ந்தார். அதுமட்டுமின்றி கன்னடத்தில் ராஜ்குமாரின் பிரதான நடிகையாக மாறினார்.  நடிகர் திலகம் சாவித்திரி ஹிந்தியிலும் தனது அசத்தலான நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார்.

இப்படி எல்லா மொழிகளிலும் பிரமிப்பூட்டும் நடிப்பை வெளிக்காட்டி உலகநாயகி என்பதை நிரூபித்துள்ளார், திரைத்துறையில் உலகநாயகன் கமலஹாசனுக்கு போட்டியாக அப்பவே நடிகை சாவித்திரி இருந்திருக்கிறார் என்பதை பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.