வடசென்னை முதல் பார்ட்டிலேயே இவ்வளவு பஞ்சாயத்தா.? சிம்புவை நிராகரித்து வெற்றிமாறன் எழுதிய கதை

வடசென்னை 2018 ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த படத்தின் கிளைமாக்ஸ் கட்சியில், இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுத்து முடித்திருந்தார் வெற்றிமாறன். அதன் பின் இன்று ஏழு வருடங்கள் ஆகியும் இன்னும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரவில்லை.

இடைப்பட்ட காலங்களில் தனுஷ் ஹிட் படம் கொடுக்க முடியாமல் திணறி வந்தார். என்னை நோக்கி பாயும் தோட்டா, ஜகமே தந்திரம், பட்டாசு, மாறன் என அடுத்தடுத்து பல தோல்வி படங்கள் கொடுத்து வந்த நிலையில். வடசென்னை இரண்டாம் பாகம் ரெடி பண்ண வெற்றிமாறனுக்கு அழைப்பு விடுத்து இருந்தார் தனுஷ் .

ஒரு பக்கம் வெற்றிமாறன் பிசியாக இருந்ததால் தனுஷ் அழைப்பிற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஆனால் இப்பொழுது அதற்கு நேரம் கூடி வந்தது போல் தெரிகிறது. வெற்றிமாறன் தனுசை குபேரா சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். அங்கே அவரிடம் சிம்புவை வைத்து ஒரு படம் பண்ண போகிறேன் என்ற தகவலையும் கூறியுள்ளார்.

இப்பொழுது சிம்பு மற்றும் வெற்றிமாறன் கூட்டணி உறுதி ஆகிவிட்டது. தனுசும் இதற்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார். ஆனால் இது வடசென்னை இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனவும் ஒரு செய்தி போய்க் கொண்டிருக்கிறது. சிம்பு முதல் பாகத்திலேயே நடிக்க விருந்தார் ஆனால் அந்த கதாபாத்திரத்தை வெற்றிமாறன் மாற்றிவிட்டார். ஆரம்பத்தில் இந்த படத்தை தயாரிக்க விருந்தது தயாநிதி அழகிரியின் கிளவுட் 9 மூவிஸ் தான் ஆனால் அதுவும் மாறிவிட்டது.

வடசென்னை முதல் பாகத்தில் நடிகர் கிஷோரின் மச்சான் கதாபாத்திரத்தில், ஆரம்பத்தில் சிம்பு தான் நடிப்பதாக இருந்தது. அந்த கேரக்டர் பெயர் குமார். படத்தில் மெயின் வில்லனாக அந்த கதாபாத்திரத்தை சித்தரித்து நிறைய எழுதியிருந்தாராம் கிஷோர். ஆனால் அதன் பின்பு அதை அப்படியே நிறுத்திவிட்டு வேறு ஒருவரை நடிக்க வைத்து விட்டாராம்.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →