Vijay Sethupathi: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மீடியாக்களிடம் மன்னிப்பு கேட்ட விஷயம் தற்போது பெரிய அளவில் வைரலாகி வருகிறது. மகன் தந்தைக்காற்றும் உதவி என்று சொல்வார்கள், அதை இனியாவது சூர்யா சேதுபதி யோசித்து பார்த்து நடந்து கொண்டாலே போதுமானது.
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி பீனிக்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். ஏற்கனவே பட அறிமுக விழாவில் எக்கச்சக்க பேச்சு பேசி எல்லாம் ஏடாகூடமானது.
மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி
தற்போது பிரமோஷன் விழாவில் சூர்யா சேதுபதி பபுள்கம் மென்று கொண்டே எல்லோரிடமும் பேசிய வீடியோ பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டது. எந்த பக்கம் பார்த்தாலும் நெட்டிசன்கள் இந்த வீடியோக்களை வைத்து கிண்டல் கேலி செய்து கொண்டு இருந்தார்கள்.
இப்படி ஒரு சமயத்தில் தான் இந்த மாதிரியான வீடியோக்களை உடனே தங்களுடைய தளத்திலிருந்து நீக்க வேண்டும் என மிரட்டல் வருவதாக மீடியாவில் பேசப்பட்டது. மேலும் இந்த மிரட்டல் விஜய் சேதுபதியால் தான் நடக்கிறது என்றும் ஆரம்பத்தில் பேசப்பட்டது.
இதற்கு விஜய் சேதுபதி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார். தங்கள் தரப்பிலிருந்து மிரட்டுவது போல் ஏதாவது போன் கால் வந்திருந்தால் தயவுசெய்து மன்னித்து விடுங்கள் என விஜய் சேதுபதி பேசியிருப்பது, இவருக்கா இந்த நிலைமை என்ற பரிதாபத்தை தான் கொடுக்கிறது.