புதன்கிழமை, ஜனவரி 22, 2025

5 வெறுக்கத்தக்க படங்களைக் கொண்டாடிய சினிமா.. துருவ் விக்ரம் கேரியரை காலி பண்ணிய படம்

Cinema that celebrated 5 hateful films: சில படங்களின் காட்சிகளும் கதைகளும் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் இருந்திருக்கிறது. ஆனாலும் அந்தப் படத்தை திரும்பத் திரும்ப பார்க்க வேண்டும் என்று தூண்டி இருக்கிறது. அப்படிப்பட்ட சில படங்களை சினிமா தூக்கி கொண்டாடி இருக்கிறது. அது என்னென்ன படங்கள் என்பதை பற்றி பார்க்கலாம்.

நான் அவனில்லை: செல்வா இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு நான் அவனில்லை திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜீவன், சினேகா, நமீதா, மாளவிகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதாநாயகனாக நடித்த ஜீவன் கிட்டத்தட்ட ஏழு கதாபாத்திரங்களில் நடித்து ஒவ்வொரு இடத்திலும் பணத்துக்காகவும் நகைக்காகவும் பெண்களை ஏமாற்றி அதன் பின் நான் அவன் இல்லை என்று நிரூபிக்கும் விதமாக கதை நகர்ந்திருக்கும். அந்த வகையில் இது என்னடா படம் என்று வெறுப்பை ஏற்படுத்திருக்கிறது. இருந்தாலும் இப்படம் மீண்டும் பார்க்கலாம் என்று ஒரு எண்ணம் தோன்ற வைத்திருக்கிறது.

மன்மதன்: சிம்பு கதை எழுதி ஏ.ஜே.முருகன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு மன்மதன் திரைப்படம் வெளிவந்தது. இதில் சிம்பு, ஜோதிகா, சிந்து துலானி, கவுண்டமணி, சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது மதன் குமார் மற்றும் மதன்ராஜ்  என்று அண்ணன் தம்பி என்று இரண்டு கேரக்டரில் நடித்திருப்பார். அதில் மொட்டை மதன்ராஜ் சின்சியராக காதலிக்கும் சிந்து துலானி அவரை ஏமாற்றி வேறு ஒருவருடன் நெருக்கத்தில் இருப்பதை பார்த்துவிட்டு தற்கொலை செய்து விடுவார். இதனால் அண்ணன் மதன் குமார் பெண்கள் ஏமாற்றுவார்கள் என்று ஒரு தவறான கண்ணோட்டத்தில் பெண்களை துன்புறுத்தும் விதமாக கதை இருக்கும்.

Also read: ஆத்விக் பிறந்த நாளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித்.. மெஸ்ஸி பாய் பார்ட்டி போட்டோஸ் வைரல்

வாலி: எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வாலி திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், சிம்ரன், ஜோதிகா, விவேக் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது அண்ணன் ஒரு ஊமை மற்றும் காது கேட்காதவராக இருப்பார். அத்துடன் சிம்ரனை பார்த்து காதலிக்கவும் ஆரம்பித்துவிடுவார். ஆனால் தம்பி அஜித், சிம்ரனை காதலித்து திருமணம் செய்து வீட்டிற்கு கூட்டிட்டு வந்ததும் அதிர்ச்சியில் அவரை எப்படியாவது தன்வசம் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று சூழ்ச்சி பண்ணும் விதமாக அண்ணன் கேரக்டரில் அஜித் நடித்திருப்பார். இதில் நெகட்டிவ் கேரக்டரில் அஜித் நடித்திருந்தாலும் இந்த படம் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கும்.

ஆதித்ய வர்மா: கிரிஷாயா இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு ஆதித்ய வர்மா திரைப்படம் வெளிவந்தது. இதில் துருவ் விக்ரம், பனிதா சந்து, பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் காதல் மற்றும் ரொமாண்டிக் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாத அளவிற்கு அளவுக்கு அதிகமாக காட்டப்பட்டிருக்கும். சில காட்சிகள் பார்க்கவே முடியாத மாதிரி லிப் லாக் காட்சிகளும் இடம் பெற்றிருக்கும். ஆனாலும் இப்படத்திற்கு மக்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்து வெற்றி பெற்றது.

அனிமல்: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் கடந்த வருடம் அனிமல் திரைப்படம் வெளிவந்தது, இதில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா, அனில் கபூர், பாபி தியோல் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது தன்னுடைய தந்தை மீதான கொலை முயற்சியை பற்றி அறிந்து அதை பழிவாங்கும் கதையாக இருக்கும். இதற்கு இடையில் கண் கூசும் அளவிற்கு சில காட்சிகள் மோசமாக காட்டப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட இப்படம் மறுபடியும் பார்க்கவே கூடாது என்று நினைக்கும் அளவிற்கு வெறுப்பை சம்பாதித்து இருக்கிறது. இருந்தாலும் வசூல் ரீதியாக இப்படம் 900 கோடியே சம்பாதித்து வெற்றி பெற்றுவிட்டது.

Also read: பேராசையில் மொத்த கேரியரையும் இழந்த இயக்குனர்.. அஜித் முதல் கமல் வரை பல்சை பிடித்துப் பார்த்த பரிதாபம்

Trending News