வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தியேட்டரை தாண்டி ஓடிடியிலும் சாதனை படைத்த விக்ரம்.. படத்தைப் பார்க்க கிளிக் செய்யவும்

இந்த ஆண்டு வெளியான படங்களில் இண்டஸ்ட்ரியல் ஹிட்டடித்த படம் கமலஹாசனின் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் காளிதாஸ் ஜெயராம், நரேன், அர்ஜுன் தாஸ் போன்ற நடிகர்கள் துணை வேடத்தில் நடித்திருந்தனர்.

சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் ஐந்து நிமிட காட்சியில் நடித்திருந்தார். அனிருத் இசையமைக்க கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் படத்தை தயாரித்திருந்தார். இப்படம் 2 மணி நேரம் 53 நிமிடங்களைக் கொண்டது. 2022-ல் ஜூன் 3 ஆம் தேதி பான் இந்திய திரைப்படமாக ஐந்து மொழிகளில் வெளியானது.

கைதி படத்தின் தொடர்ச்சியாக விக்ரம் படத்தில் சில காட்சிகளை வைத்து வியக்க வைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ். போதைப் பொருள் கடத்தலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் விக்ரம் படம் 120 இல் இருந்து 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட உலகம் முழுவதும் 442.45 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இப்படத்தின் தமிழ்நாட்டு ரிலீஸ் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியிருந்தது. இதில் கமலுக்கு கொடுக்க வேண்டிய பங்கை சரியாக கொடுத்துள்ளது இந்த நிறுவனம்.

தியேட்டரில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் ஒரு மாதம் கடந்து ஜூலை 8ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விக்ரம் படம் ரிலீஸ் ஆனது. மேலும் இப்படம் வெளியான முதல் வாரத்திலேயே அதிகப் பார்வையாளர்களைப் பெற்ற படம் என்ற சாதனையை விக்ரம் படம் படைத்தது.

vikram movie
vikram movie

முழுப்படத்தையும் OTT-யில் பார்க்க

Trending News